

கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்ட தொழிலதிபரை போலீஸில் சிக்கவைப்பதற்காக, பவர் ஸ்டார் சீனிவாசன் கடத்தல் நாடகமாடி இருப்பது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை அண்ணாநகரில் வசிப்பவர் நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன். கடந்த 5-ம் தேதி பவர் ஸ்டாரை காணவில்லை என்று அவரது மனைவி ஜூலி அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சீனிவாசனை செல் போனில் போலீஸார் தொடர்பு கொண்டபோது, அவர் ஊட்டியில் இருப்பதாக தெரிவித்தார்.
இதனையடுத்து சீனிவாசனின் மகள், தனது தாய், தந்தையின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக போலீஸில் புகார் அளித்தார். இந்நிலையில் கடந்த 9-ம் தேதியன்று ஊட்டியில் இருந்து திரும்பிய பவர் ஸ்டார் சீனிவாசன், அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், “பெங்களூரு தொழிலதிபர் ஆலம்மிடம் ரூ.90 லட்சம் வாங்கியிருந்தேன். அந்த பணத்துக்காக என்னை அடியாள் மூலம் ஊட்டிக்கு கடத்தி, சித்ரவதை செய்தார். என் மனைவி பெயரில் ஊட்டியில் உள்ள ரூ.1 கோடி நிலத்தை எழுதித் தருவதாக கூறினேன். அதன் பேரில் என் மனைவியை மிரட்டி ஊட்டிக்கு வரவழைத்து அறையில் அடைத்து வைத்தனர். நான் தப்பி வந்துவிட்டேன். ஆலம்மிடம் இருந்து என் மனைவியை மீட்டுத் தாருங்கள்” என்று கூறியிருந்தார்.
ஊட்டிக்கு சென்ற தனிப்படை போலீஸார், ஆலம் உட்பட 7 பேரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பவர் ஸ்டார் சீனிவாசன் கடத்தல் நாடக மாடியது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
பணத்தை திருப்பிக்கேட்ட போது, ஊட்டியில் உள்ள நிலத்தை எழுதி தருவதாக கூறி சீனிவாசன் அழைத்ததால்தான் ஊட்டிக்கு வந் தேன். நான் கடத்தவில்லை. சொன்னபடி சீனிவாசன், ஊட்டிக்கு வராததால் விசாரித்துவர ஆட்களை அனுப்பினேன். நிலம் தனது மனைவி பெயரில் இருப்பதாக கூறியதால், அவரையும் ஊட்டிக்கு வரச் சொன்னோம். நாங்கள் யாரையும் அடைத்து வைக்கவில்லை. தனது மகள் மூலம் புகாரும் கொடுக்க வைத்துள்ளார். திட்டமிட்டு எங் களை சிக்கவைக்க இப்படி செய் துள்ளார்’ என்று ஆலம் கூறினார்.
இது உண்மை என்பதை சீனி வாசனும் ஒப்புக்கொண்டார். அவரை கடுமையாக எச்சரித்து அனுப்பியுள்ளோம்.போலீஸாரை அலைக்கழித்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட் டுள்ளோம்.
இவ்வாறு போலீஸார் கூறினர்.
கைது செய்யப்பட்ட ஆலம் உட்பட 7 பேரையும் நேற்று முன் தினம் போலீஸார் விடுவித்தனர்.