Last Updated : 02 Dec, 2018 10:39 AM

 

Published : 02 Dec 2018 10:39 AM
Last Updated : 02 Dec 2018 10:39 AM

நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டையில் மறுசீரமைப்பு பணி: 13 பயிற்சி துணை ஆட்சியர்கள் கூடுதலாக நியமனம்

புயலால் பாதிக்கப்பட்ட நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட் டையில், மீட்பு மற்றும் மறு சீரமைப்பு பணிகளை கவனிக்க, பயிற்சி துணை ஆட்சியர்கள் 13 பேர் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த மாதம் வீசிய கஜா புயல் காரணமாக நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் வீடுகள், பயிர்கள் கடும் பாதிப்பை சந்தித் தன. புயல் தாக்கி 14 நாட்கள் கடந்த நிலையில், இந்த மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பவில்லை. சில ஊர்களில் மின்சார வசதி சீர் இன்னும் இன்னும் செய்யப்படவில்லை.

புயல் மற்றும் கனமழையால் 63 பேர் உயிரிழந்துள்ளனர். அவர் களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயிர்கள், கால்நடைகள், வீடுகளுக்கும் நிவாரணம் அறி விக்கப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அந்தந்த மாவட்ட அமைச்சர்களுடன் கூடுதலாக, மூத்த அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் பணி யாற்றி வருகின்றனர். இவர்களு டன் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள், மாவட்ட ஆட்சி யர்கள் மற்றும் மாவட்ட வரு வாய்த்துறை அதிகாரிகளும் அதிக அளவில் பணியமர்த்தப்பட் டுள்ளனர்.

இந்நிலையில் நிவாரணப் பணிகளை விரைந்து முடிக்க, அரசு முடிவெடுத்துள்ளது. இதை யடுத்து கூடுதல் அதிகாரிகள் தற்போது நிவாரணப் பணிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அந்த வகையில், தற்போது பயிற்சியில் உள்ள துணை ஆட்சியர்கள் 13 பேர் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அனுப்பப்பட் டுள்ளனர்.

இதுதொடர்பாக வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் பிறப்பித்த உத்தரவில், “கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங் களில் தற்போது மேற்கொள்ளப் பட்டு வரும் மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை மேற் கொள்ள தற்போது, அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத் தில் பயிற்சி துணை ஆட்சியர் களாக உள்ள 13 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, நாகை மாவட்டத்துக்கு ஏ.என்.லாவண்யா, கே.சைவர்தினி, கே.காயத்ரி சுப்பிரமணி, எஸ்.கணேஷ், எம்.ஷேக் மன்சூர், தஞ்சைக்கு என்.ப்ரீத்தி பார்கவி, பி.மணிராஜ், எம்.ஸ்ரீதேவி ஆகி யோர் நியமிக்கப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்துக்கு டி.தனப் பிரியா, எஸ்.லட்சுமி பிரியா, பி.ஜெக தீஸ்வரன், புதுக்கோட்டைக்கு ஏ.வி.சுரேந்திரன், எம்.முத்துக் கழுவன் ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர்” என்று தெரிவிக்க ப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “நாகை, தஞ்சை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்கள் இந்த பயிற்சி துணை ஆட்சியர்களை மீட்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள பணிய மர்த்த வேண்டும் என்று அறி வுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஓரிரு தினங்களில் பணியில் சேரும் அவர்கள் அடுத்த உத்தரவு வரும்வரை அந்த மாவட்டத் திலேயே தங்கியிருந்து அவர்கள் பணியாற்றவும் அறிவுறுத்தப்பட் டுள்ளது.

காலி பணியிடங்களுக்கு நியமனம்

இதுதவிர, நாகை மாவட்டத் தில், காலியாக இருந்த தனித்துணை ஆட்சியர் (வருவாய் நீதிமன்றம்), மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலு வலர், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவி யாளர் (நிலம்) ஆகிய பணியிடங் களுக்கும் அதிகாரிகள் நியமிக்கப் பட்டுள்ளனர்’’ என்றார்.அடுத்த ஓரிரு தினங்களில் பணியில் சேரும் அவர்கள் அடுத்த உத்தரவு வரும்வரை அந்த மாவட்டத்திலேயே தங்கியிருந்து பணியாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x