

விழுப்புரத்தில் உள்ள ஜெயின் ஸ்வேதாம்பர் தேராபந்த் சங்கம் சார்பில் ஜவுரிலால் ஜெயின் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற அருளாசி கூட்டத்தில் பேசிய ஆச்சாரிய ஸ்ரீமஹாஸ்ரமன், 'நல்லெண்ணத்தையும், நன்னெறியையும் கடைபிடிக்க வேண்டும்', 'மனிதனை அழிக்கும் போதையை ஒழிக்க வேண்டும்' என்ற தலைப்புகளில் உபதேசித்தார். இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள சமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் பங்கேற்று உபதேசம் பெற்றனர்.
இக்கூட்டத்துக்குப் பிறகு புதுச்சேரி செல்லும் ஆச்சாரிய ஸ்ரீமஹாஸ்ரமன், ஜூன் மாதம் பெங்களூரு சென்றடைகிறார். நடைபயணமாக செல்லும் இவருடன் 40 பெண் துறவிகள் உட்பட 80 துறவிகள் உடன் செல்கின்றனர். ராஜஸ்தான், ஹரியாணா, பஞ்சாப், மத்திய பிரதேசம், பீகார், அசாம், நாகாலாந்து, மேகாலயா, மேற்குவங்கம், உத்திர பிரதேச அரசுகள் ஆச்சாரிய ஸ்ரீமஹாஸ்ரமனை அரசு விருந்தினராக அறிவித்தன. நேபாள அரசு தபால் தலை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.