Published : 03 Sep 2014 11:11 AM
Last Updated : 03 Sep 2014 11:11 AM

சிதம்பரத்தில் சகோதரர்கள் படுகொலை: வெடிகுண்டு வீச்சு; 4 பேர் போலீஸில் சரண்

சிதம்பரம் அண்ணாமலை நகரைச் சேர்ந்த சகோதரர்களை மர்ம நபர்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை வீடுபுகுந்து வெட்டிக் கொலை செய்து, அவர்களின் தலைகளை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு வைத்து விட்டு தலைமறைவாகி விட்டனர். இதையடுத்து கொலை தொடர்பாக 4 பேர் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல்நிலையத் தில் சரண் அடைந்துள்ளனர்.

சிதம்பரம் அண்ணாமலைநகர் கலுங்குமேட்டைச் சேர்ந்தவர் ஆம்பு லன்ஸ் குமார்(34). இவரது தம்பி ராஜேஷ்(32). இவர்கள் இருவரும் ஆம்புலன்ஸ் மற்றும் ஆட்டோக்கள் வைத்து தொழில் செய்து வந்துள்ள னர். இந்நிலையில் செவ்வாய்க் கிழமை அதிகாலை சுமார் 2.30 மணி அளவில் பைக்குகளில் முகத்தை துணியால் மூடிக்கொண்டு மர்ம நபர்கள் ஒன்று குமார் வீட்டுக்கு வந்தனர்.

அங்கு காவலுக்கு இருந்தவர் களை வெடிகுண்டு வீசியும் அரிவா ளால் வெட்டியும் தாக்கினர். பின்னர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று ஆம்புலன்ஸ் குமார், அவரது தம்பி ராஜேஷ் ஆகிய இருவரை யும் அரிவாளால் சரமாரியாக வெட் டிக் கொலை செய்தனர். பின்னர் இருவரது தலையையும் எடுத்து கொண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுழைவுவாயில் முன்பு வைத்து விட்டு தலைமறைவாகினர் எனக் கூறப்படுகிறது.

வெடிகுண்டு வீச்சு மற்றும் அரி வாளால் தாக்கியதில் ஆம்புலன்ஸ் குமாரின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களான தருமபுரி பாப்பி ரெட்டிபட்டியைச் சேர்ந்த முத்தமி ழன்(21), அரக்கோணத்தைச் சேர்ந்த வின்சென்ட் பால்ராஜ்(22), சவுந்தர்(19), கடலூரைச் சேர்ந்த பாண்டியன்(27), சிதம்பரத்தைச் சேர்ந்த மணி(19), சங்கராபுரத்தைச் சேர்ந்த பிரபாகரன்(20) ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் பாண்டியன் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது.

தகவலறிந்த சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம், அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் பி.முருகா னந்தம் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று இருவரது உடல் மற்றும் தலைகளை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வெடிக்காமல் இருந்த 2 நாட்டு வெடிகுண்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதனிடையே கொலை சம்பவம் தொடர்பாக சிதம்பரம் அண்ணாமலை நகரை சேர்ந்த பட்டாபிராமன்(28), இவரது சகோதரர் மணிகண்டன்(30), வெங்கடேசன்(29) மற்றும் கஜேந்திரன்(28) ஆகியோர் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x