

சென்னை குடிநீர் வாரியத்தின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங் களில் தனியார் லாரிகள் கழிவுநீர் விடுவதற்கான கட்டணம் ரூ.250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகரப் பகுதியில் உருவாகும் கழிவுநீர் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் கோயம் பேடு, பெருங்குடி, கொடுங்கையூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட் டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. இந்த சுத்திகரிப்பு நிலையங்களில் தினமும் 727 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்தி கரிக்கப்படுகிறது.
கடந்த 15 ஆண்டுகளாக
மேலும், கழிவுநீர் கட்டமைப்பு இல்லாத பகுதிகளில், கழிவுநீர் லாரிகள் மூலமாக எடுக்கப்படும் கழிவுநீரை திறந்தவெளி மற்றும் நீர்நிலைகளில் விட தடை விதிக் கப்பட்டுள்ளது. அவற்றை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் மட்டுமே விட வேண்டும். அதற் கான சேவை கட்டணமாக 9,000 லிட்டருக்கு ரூ.100 என சென்னை குடிநீர் வாரியம் கடந்த 15 ஆண்டு களாக வசூலித்து வருகிறது. இக்கட்டணம் தற்போது ரூ.250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அது, நேற்று முதல் அமலுக்கு வந்துள் ளது.
இதுதொடர்பாக சென்னை குடி நீர் வாரிய அதிகாரிகள் கூறிய தாவது:
கட்டண உயர்வு
சுத்திகரிப்பு செலவு மற்றும் பணியாளர்களின் ஊதியம் அதிகரித் துள்ளதாலும், தற்போது வசூலிக் கும் கட்டணம் 15 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டது என்ப தாலும், அதை ரூ.250 ஆக உயர்த்தி இருக்கிறோம். இது கழிவுநீரை ஏற்றி வரும் லாரிகளிடம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
மேலும் லாரியில் கொண்டுவரப் படும் கழிவுநீர், நாங்கள் சுத்திகரிப்பு செய்யும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக நுண்ணுயிர் கலந்த 9,000 லிட்டர் நீரை ரூ.300-க்கு வழங்கி வந்தோம். இது அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு பயன்படக்கூடியது. இதை ரூ.3,000 ஆக உயர்த்தி இருக்கிறோம். இதுவும் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
பெருங்குடியில் சிக்கல்
சென்னை மாநகரின் விரிவாக் கப்பட்ட பகுதிகளில் இருந்துதான் லாரிகள் கழிவுநீரை கொண்டு வருகின்றன. எல்லா பகுதிகளிலும் கட்டண உயர்வை கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் ஏற்றுக்கொண்ட னர். ஆனால் பெருங்குடி மண்ட லத்தில் மட்டும் சில கழிவுநீர் லாரி உரிமையாளர்கள், கழிவுநீர் சுத்திகரிப்புக்கான கட்டணம் ரூ.250 ஆக உயர்த்தப்பட்டதை ஏற்க மறுத்து வருகின்றனர்.
காவல்நிலையத்தில் புகார்
கட்டணத்தை பழையபடியே நிர்ணயிக்காவிட்டால், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம். சாலையில் கழிவுநீரை விட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம். எங்கள் ஒப்புதல் இன்றி எப்படி சேவை கட்டணத்தை உயர்த்தலாம் என்று குடிநீர் வாரிய அதிகாரிகளை கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் மிரட்டுகின்றனர். இதுதொடர்பாக அருண் என்பவர் மீது, பெருங்குடி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருக்கிறோம்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.கழிவுநீரகற்றும் பணியில் குடிநீர் வாரிய லாரிகள்
மடிப்பாக்கம், ராம்நகர், புழுதிவாக்கம், பெருங்குடி, உள்ளகரம் உள்ளிட்ட பகுதிகளில் செல்வாக்கு மிக்க சிலர், லாரிகள் மூலம் கழிவுநீர் அகற்றும் தொழிலில் ஈடுபட்டு வருவதால், அவர்களை யாரும் கேள்வி கேட்க முடியாத நிலை உள்ளது. அவர்கள் நிர்ணயிப்பது தான் கட்டணம். ஒரு லோடு கழிவுநீரகற்ற ரூ.2 ஆயிரத்துக்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலக அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை மாநகரின் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் குடியிருப்புகளில் இருந்து கழிவுநீரை அகற்றும் சேவை கடந்த மே 15-ம் தேதி தொடங்கப்பட்டது. 044-45674567 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு கழிவுநீரகற்று லாரிகள் கோரி பதிவு செய்யலாம். 6 ஆயிரம் லிட்டர் கழிவுநீரை அகற்ற ரூ.650 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தற்போது 25 லாரிகள் இயக்கப்படுகின்றன.
இதுவரை 2 ஆயிரத்து 612 பேர் கழிவுநீர் லாரி கேட்டு அழைத்துள்ளனர். மொத்தம் 1,865 நடைகள் இயக்கப்பட்டுள்ளன. கூடுதலாக 21 லாரிகளை இயக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்தக் கழிவுநீர் லாரிகளை யாரேனும் இடையூறு செய்தால், காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.