

திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து திருக்குடை ஊர்வலம் இன்று புறப்படுகிறது. திருப்பதியில் பிரம்மோற்சவம் தொடங்கவுள்ள நிலையில், திருக்குடை ஊர்வலம் இன்று புறப்படுகிறது. சென்னை பூக்கடை அருகில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோயிலில் இருந்து காலை 10 மணிக்கு தொடங்கும் திருக்குடை ஊர்வலம், மாலை 4 மணிக்கு கவுனி தாண்டுகிறது.
பெரம்பூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர், திருவள்ளூர், திருப்பாச்சூர் வழியாக சென்று 29-ம் தேதி திருப்பதி சென்றடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஹிந்து தர்மார்த்த ஸமிதி அறக்கட்டளை செய்துள்ளது.