Published : 28 Dec 2018 10:24 AM
Last Updated : 28 Dec 2018 10:24 AM

அரசு மருத்துவர், செவிலியர்கள், ரத்த வங்கி ஊழியர்கள் மீது வழக்கு பதிவு: மருத்துவத் துறை அறிக்கையின்படி மேல் நடவடிக்கை

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றிய விவகாரம் தொடர்பாக சாத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர், செவிலியர்கள் மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாத்தூர் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு எச்.ஐ.வி. பாதித்த ரத்தம் ஏற்றப்பட்ட விவ காரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதா கிருஷ்ணன் மற்றும் மருத்துவத் துறை அதிகாரிகள் தொடர்ந்து இது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட கர்ப்பிணி சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதில் கூறி உள்ளதாவது: எனக்கு 2015-ல் திருமணம் நடைபெற்று 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. 2-வது முறையாக கர்ப்பமானதால் மருத்துவப் பரிசோதனைக்காக டிச. 3-ம் தேதி சாத்தூர் அரசு மருத்துவ மனைக்குச் சென்றேன்.

அப்போது, அங்கிருந்த மருத்து வர் எனக்கு ரத்தம் குறைவாக உள்ளதால் ரத்தம் செலுத்த வேண்டும் என்றார். மேலும், சிவகாசி அரசு மருத்துவமனைக்குச் சென்று ரத்தம் வாங்கி வர கடிதம் கொடுத்தார். பின்னர், சிவகாசி அரசு மருத்துவமனையில் இருந்து எனது கணவர் வாங்கி வந்த ரத்தம் எனக்குச் செலுத்தப்பட்டது.

அன்றில் இருந்து குளிர் காய்ச்சல் ஏற்பட்டதால் மீண்டும் சாத்தூர் அரசு மருத்துவமனைக்குச் சென்றேன். ஆனால், மருத்துவரும், செவிலியர்களும் ரத்தம் ஏற்றினால் சிலருக்கு காய்ச்சல் வரும் எனக் கூறினர். டிச.5-ம் தேதி டிஸ்சார்ஜ் செய்தனர். தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டதால் டிச.17-ம் தேதி சாத்தூர் அரசு மருத்துவமனை சென்றேன். அப்போது எனது ரத்தத்தை பரிசோதித்தபோது எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்ட விவரம் மருத்துவருக்குத் தெரியும்.

ஆனால், டிச.18-ம் தேதி மருத்துவர் என்னை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு மீண்டும் ரத்தப் பரிசோதனை செய்து எனக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பதாகக் கூறினர். இதனால் எனக்கும், வயிற்றில் இருக்கும் சிசுவுக்கும் பாதிப்பு ஏற்படுத்திய சாத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர், செவிலியர்கள், சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஊழியர் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளார்.

புலன் விசாரணை

இதையடுத்து, ஐ.பி.சி. 269, 338 (உயிருக்குப் பாதுகாப்பு இல்லாமல், அலட்சியமாகச் செயல்பட்டது) ஆகிய பிரிவுகளின் கீழ் சாத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர், செவிலியர்கள் மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஊழியர்கள் மீது நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் கூறும்போது, "இந்த வழக்கு குறித்து சாத்தூர் இன்ஸ்பெக்டர் புலன் விசாரணை நடத்தி வருகிறார். மேலும், இது தொடர்பாக மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை கோரப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின் அடிப்படை யில் சம்பவத்துக்குக் காரணமான நபர்கள் மீது சட்டப்பூர்வ நடவ டிக்கை எடுக்கப்படும். எங்களது புலன் விசாரணை, மருத்துவத் துறை உயர்மட்டக் குழு அறிக்கை யின் அடிப்படையில் மேல் நடவ டிக்கை எடுக்கப்படும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x