

பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவை அதிமுக தலைவர்கள் சந்தித்தனர்.
ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோர் இன்று காலை 11 மணியளவில் பரப்பன அகரஹார சிறை வளாகத்தில் நுழைந்தனர்.
ஆனால் ஷிலா பாலகிருஷ்ணனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் 4 அமைச்சர்கள் ஜெயலலிதாவைச் சந்திக்க சிறப்பு அனுமதி பெற்றனர். ஆனால் அவர்கள் ஜெயலலிதா முதுகு வலியால் அவதிப்படுவதாகக் கோரி ஒயர் சேர் ஒன்றை உள்ளே எடுத்துச் செல்ல சிறை அதிகாரிகள் அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இன்று மாலை சட்டப்பேரவை கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அதிமுக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.