

வீடுகள், வெளியிடங்களில் குடும்ப வன்முறை, பாலியல் துன்புறுத்தல் களின்போது அவசர உதவி பெறும் வகையில் பெண்களுக்கான 181 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவையை முதல்வர் கே.பழனிசாமி தொடங்கிவைத்தார்.
இது தொடர்பாக நேற்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பெண்கள் வெளியிடங்களிலும் பணியாற்றும் இடங்களிலும் பாலி யல் துன்புறுத்தல் உள்ளிட்ட பல் வேறு பாதிப்புகளை சந்திக்கின்ற னர். வீட்டிலும் குடும்ப வன்முறை யால் பாதிக்கப்படுகின்றனர். இது போன்ற சூழல்களில் அவசர உதவி பெறும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும், பெண்களுக்கான ‘181’ என்ற கட்டணமில்லா தொலை பேசி சேவையை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
அவசரத் தேவையின்போது பெண்கள் இந்த எண்ணை தொடர்பு கொண்டு காவல், மருத்துவமனை, ஆம்புலன்ஸ், சட்ட உதவி போன்ற அத்தியாவசிய துறைகளின் உதவி களைப் பெறலாம். மேலும், பெண் களுக்காக அரசால் செயல்படுத் தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்த விவரங்களையும் குடும்ப வன்முறை போன்ற இதர வகை கொடுமைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு அரசு வழங்கும் உதவிகள் குறித்தும் கேட்டறிய லாம். பெண்கள் நலனுக்காகவும், பாதுகாப்புக்காகவும் ரூ.62 லட்சத்து 70 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த சேவையை முதல்வர் கே.பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.
தாம்பரம் சேவை இல்ல வளா கம், செங்கல்பட்டு அரசு மருத்துவ மனை வளாகம் ஆகிய இடங்களில் ரூ.51 லட்சத்து 51 ஆயிரத்தில் கட்டப் பட்டுள்ள பாதிக்கப்பட்ட பெண் களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய கட்டிடங்களை திறந்து வைத்தார்.
ஏழைப் பெண்களுக்கான திரு மண நிதியுதவி திட்டத்தின்கீழ், 7 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்கம், ரூ.50 ஆயிரத்துக்கான காசோலைகளை முதல்வர் வழங் கினார். மூன்றாம் பாலினத்தவர் சொந்த தொழில் தொடங்க, ரூ.20 ஆயிரமாக இருந்த மானியம், தற் போது ரூ.50 ஆயிரமாக உயர்த்தப் பட்டுள்ளது. இதன்மூலம் 150 மூன் றாம் பாலினத்தவர் பயன்பெறுகின் றனர். இவர்களில் 5 பயனாளி களுக்கு தலா ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையையும் முதல்வர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சரோஜா, பெஞ்சமின், பாண்டிய ராஜன், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், துறை செயலர்கள் க.மணிவாசன், சி.விஜயராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.