Published : 17 Dec 2018 09:40 AM
Last Updated : 17 Dec 2018 09:40 AM

கருணாநிதி சிலை திறப்பு விழா துளிகள்

l அண்ணா அறிவாலய வளாகத் தின் முன்பு உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் உள்ள பூங்காவில் அண்ணா சிலை இருந்தது. தற்போது அங்கிருந்து அண்ணா சிலை அகற்றப்பட்டு அண்ணா அறிவாலய உள் நுழைவு வாயிலின் முன்பு திமுகவுக்கு சொந்தமான இடத்தில் புதிய பீடத்தில் வெண்கலத்தில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா சிலையும், 8 அடியில் கருணாநிதி சிலையும் அருகருகே அமைக்கப்பட்டுள்ளன.

l சோனியா, ராகுல் இருவரும் டெல்லியில் இருந்து மாலை 4.10 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தனர். மாநிலங் களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி, தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி உள்ளிட்டோர் அவர்களை வரவேற்றனர். நேராக கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு மாலை 5.16 மணிக்கு அண்ணா அறிவாலயம் வந்தனர்.

l திமுக தலைவர் மு.க.ஸ்டா லின் அனைவரையும் வரவேற்றார். கருணாநிதி சிலையை ரிமோட் கண்ட்ரோல் மூலம் சோனியா காந்தி மாலை 5.18 மணிக்கு திறந்துவைத்தார். 2 நிமிடங்களில் இந்த நிகழ்ச்சி முடிந்தது. சிலை திறப்பு விழா மேடையில் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அமர்ந்திருந்தார்.

l பின்னர் சோனியா, ராகுல், சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் மெரினா கடற்கரைக்கு சென்று அண்ணா, கருணாநிதி நினைவிடங் களில் மலர்தூவி மரியாதை செலுத்திவிட்டு, ஒய்எம்சிஏ திடலுக்கு வந்தனர்.

l அண்ணா அறிவாலயத்தில் நடந்த சிலை திறப்பு விழாவில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாஜக அதிருப்தி எம்.பி. சத்ருகன் சின்கா, கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு, வடிவேலு, நாசர், விவேக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

l மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா, மகன் உதயநிதி, கனி மொழியின் கணவர் அரவிந்தன் உள்ளிட்ட கருணாநிதி குடும்பத் தினரும், சண்முகநாதன் உள்ளிட்ட கருணாநிதியுடன் உடன் பணியாற்றியவர்களும் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றனர்.

l ஒய்எம்சிஏ திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் கருணாநிதி குறித்த ‘சூரியன் மறைவதில்லை' என்ற நூலை சோனியா வெளியிட ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். பின்னர், மேடையில் இருந்த தலைவர்களுக்கு வீர வாள் பரிசளிக்கப்பட்டது. தலைவர்கள் அனைவரும் அதை உயர்த்திப் பிடிக்க, தொண்டர்கள் கரவொலி எழுப்பினர்.

l சோனியா, ராகுல் ஆகியோர் இசட் பிளஸ் பாதுகாப்பில் இருப்பதால் பாதுகாப்புப் பணியில் ஆயிரக்கணக்கான காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட் டிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x