Published : 20 Dec 2018 01:04 PM
Last Updated : 20 Dec 2018 01:04 PM

குற்றச்சாட்டை ஆராய விஷால் அனுமதிக்க வேண்டும்: கமல்ஹாசன்

விஷால் மீதான குற்றச்சாட்டு என்ன என்பதை ஆராய அவர் இடம் கொடுக்க வேண்டும் என, மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.

பொன்.மாணிக்கவேல் மீது அதிகாரிகள் புகார்கள் எழுப்பியுள்ளனர். அதேசமயம், தனக்கு அரசியல் அழுத்தம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளாரே?

நேர்மை எந்த பக்கம் இருக்கிறது என்பதை ஆராய்ந்த பின்புதான் கருத்து சொல்ல வேண்டும். ஒருதரப்புக்கு மட்டும் பாரபட்சமாக கருத்து சொல்ல முடியாது. அரசியல் அழுத்தத்தை மீறிதான் இங்கு பணியாற்ற வேண்டும். வேறு வழியில்லை. தமிழகத்தில் அரசியல் அழுத்தம் நேர்மையாக இருக்கும் எல்லோருக்கும் இருக்கிறது.

தயாரிப்பாளர்கள் சங்கத்தை மூடியுள்ளது குறித்து...

இளையராஜாவுக்கு பாராட்டு விழா எடுக்க வேண்டும் என்பது அனைவரின் மனதிலும் இருக்கிறது. விஷால் மீதான குற்றச்சாட்டு என்ன என்பதை ஆராய வேண்டும் என்றால், அதற்கு இடம் கொடுக்கும் மனப்பான்மை அவருக்கு இருக்கும் என நம்புகிறேன்.

சீதக்காதி திரைப்படத்திற்கு எதிராகவும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. திரைப்படங்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கும் போக்கு அதிகரித்துள்ளதே...

அதற்கு ஆரம்ப விழா செய்தது என் படங்கள் என்று நான் வருத்தப்பட்டுக் கொள்ளலாம். படத்தைப் பார்த்துவிட்டு கருத்து தவறாக இருந்தால் சொல்லலாம். எல்லாமே தவறு என்றால் ஒன்றும் பேச முடியாது. கருத்து சுதந்திரம் நாடு முழுவதும் ஒடுக்கப்படுகிறது.

இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x