

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு டிசம்பர் 5-ம் தேதி ஓபிஎஸ், முதல்வர் கே.பழனிசாமி ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக சென்று நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெய லலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மறைந்தார். முதலாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி அண்ணாசிலையில் இருந்து அதிமுக ஒருங்கிணைப் பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் கே.பழனிசாமி ஆகியோர் தலைமையில், அமைதிப் பேரணியாகச் சென்று, ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
அதேபோல், 2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, டிசம்பர் 5-ம் தேதி காலை 9.30 மணிக்கு அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங் கிணைப்பாளர் முதல்வர் கே.பழனி சாமி ஆகியோர் தலைமையில் ஊர்வலமாகச் சென்று, ஜெய லலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு, உறுதிமொழி ஏற் இத்தகவலை அதிமுக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், அதிமுக இலக் கிய அணி இணைச் செயலாளராக விளாத்திகுளம் முன்னாள் எம்எல்ஏ பி.சின்னப்பன் நியமிக்கப் பட்டுள்ளார்.