இந்திய ராணுவத்தின் தகவல் தொடர்பு பயன்பாட்டுக்கான ஜிசாட்-7ஏ செயற்கைக்கோள் இன்று விண்ணில் பாய்கிறது: 26 மணி நேர கவுன்ட் டவுன் தொடங்கியது

இந்திய ராணுவத்தின் தகவல் தொடர்பு பயன்பாட்டுக்கான ஜிசாட்-7ஏ செயற்கைக்கோள் இன்று விண்ணில் பாய்கிறது: 26 மணி நேர கவுன்ட் டவுன் தொடங்கியது
Updated on
1 min read

இந்திய ராணுவத்தின் தகவல் தொடர்பு பயன்பாட்டுக்கென பிரத்யேகமாக உருவாக்கப் பட்டுள்ள ஜிசாட்-7ஏ செயற் கைக் கோள் ஜிஎஸ்எல்வி எப்-11 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று (புதன்கிழமை) மாலை 4.10 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான 26 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று பிற்பகல் 2.10 மணிக்கு தொடங்கியது.

2,250 கிலோ எடை

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, இந் திய எல்லைப் பகுதியில் தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்துவது உட்பட ராணுவ பயன்பாட்டுக்காக ‘ஜிசாட்-7ஏ’ என்ற அதிநவீன செயற்கைக் கோளை உரு வாக்கியுள்ளது. இந்த செயற் கைக் கோள் மூலம் போர்க் காலங்களில் விமானங்களின் இருப்பிடத்தை துல்லியமாக அறிய முடியும். மேலும், தகவல் தொடர்பு சேவைக்கும் வான்வெளி தாக்குதலுக்கும் இது பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். இந்திய எல்லை பகுதியை டிரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலமாக கண்காணிப்பதற்கும் இந்த செயற்கைக்கோள் உறு துணையாக இருக்கும். 2,250 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோளின் ஆயுட் காலம் 8 ஆண்டுகள் ஆகும்.

இந்த நிலையில், ஏற் கெனவே திட்டமிட்டபடி, ஆந்திர மாநிலம் ஹரிகோட் டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி - எஃப்11 ராக் கெட் மூலம் ஜிசாட்-7ஏ செயற்கைக்கோளானது இன்று மாலை சரியாக 4.10 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. அது புவி சுற்றுவட்டப்பாதையில் அதிகபட்சம் 40,600 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை நிறுத்தப்பட இருக்கிறது.

இதைத்தொடர்ந்து, ராக் கெட்டை விண்ணில் குறித்த நேரத்தில் ஏவுவதற்கான 26 மணி நேர கவுன்ட் டவுன் தொடங்குவதற்கான அனுமதி நேற்று வழங்கப்பட்டது. இதன்பேரில் நேற்றைய தினம் பிற்பகல் 2.10 மணி முதல் ஜிஎஸ்எல்வி எப்-11 ராக்கெட் விண்ணில் ஏவுவதற்கான கவுன்ட் டவுன் தொடங்கியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in