Published : 29 Dec 2018 07:19 AM
Last Updated : 29 Dec 2018 07:19 AM

சென்னை, காஞ்சிபுரம் உட்பட 12 மாவட்டங்களில் பல்கலைக்கழகங்கள், அரசு கல்லூரிகளுக்கு ரூ.25 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள்:  முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உள்கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் அரியலூர் மாவட்டத் தில் அரியலூர் கலை கல்லூரியில் ரூ.4 கோடியே 23 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 15 வகுப்பறைகள், ஒரு ஆங்கில மொழி ஆய்வகம், 4 ஆய்வக தொகுப்பு கட்டிடங்களை முதல்வர் கே.பழனிசாமி தலைமைச் செயல கத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலமாக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

மேலும், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.6 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடங்கள், மனித மரபியல் மற்றும் மூலக்கூறு, உயிரி தொழில் நுட்பத் துறைகளுக்கான கட்டிடங் கள், கரூர் அரசு கலைக் கல்லூரி யில் ரூ.1 கோடியில் கட்டப்பட்ட 9 பொன்விழா நினைவு வகுப்பறை கட்டிடங்கள், தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் ரூ.1 கோடியே 65 லட்சம் செலவில் கட்டப்பட்ட 10 வகுப்பறை கட்டிடங் கள், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் ரூ.1 கோடியே 37 லட்சம் செலவில் கட்டப்பட்ட 5 வகுப்பறை கட்டிடங்கள் திறக் கப்பட்டன.

சென்னை சைதாப்பேட்டை அரசு கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் ரூ.70 லட்சம் செலவில் கட்டப்பட்ட 4 வகுப்பறை கட்டிடங்கள், பிராட்வே பாரதி மகளிர் கல்லூரியில் ரூ.87 லட்சம் செலவில் கட்டப்பட்ட 2 வகுப் பறைகள், பல்நோக்குக்கூடம், காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில் ரூ.1 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 4 வகுப்பறை கட்டிடங்கள், மேம்படுத்தப்பட்ட ஆய்வகம், நூலக கட்டிடங்கள், செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலைக்கல்லூரியில் ரூ.1 கோடியே 25 லட்சம் செலவில் கட்டப்பட்ட 8 வகுப்பறை கட்டிடங்கள், கழிவறை கட்டிடங்களை திறந்து வைத்தார்.

வகுப்பறை கட்டிடங்கள்

மேலும், நாமக்கல் குமார பாளையம் அரசு கல்வியியல் கல்லூரியில் ரூ.69 லட்சம் செலவில் கட்டப்பட்ட கருத்தரங்கக்கூடம், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் ரூ.70 லட்சம் செலவில் கட்டப்பட்ட 5 வகுப்பறை கட்டிடங்கள், ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் ரூ.70 லட்சம் செலவில் கட்டப்பட்ட இயற்பியல், வேதியியல் துறை ஆய்வக கட்டிடங்கள், கடலூர் விருத்தாச் சலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் ரூ.70 லட்சம் செலவில் கட்டப்பட்ட 5 வகுப்பறைக் கட்டிடங்களும் அப்போது திறக்கப்பட்டன.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அரசு கலைக்கல்லூரியில் ஒரு கோடியே 24 லட்சம் செலவில் கட்டப்பட்ட மகளிர் விடுதி, திருப்பூர் சிங்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் ரூ.56 லட்சம் செலவில் கட்டப்பட்ட 5 வகுப்பறை கட்டிடங் கள், மதுரை தமிழ்நாடு பாலி டெக்னிக் கல்லூரியில் ரூ.1 கோடியே 70 லட்சம் செலவில் கட்டப்பட்ட ஆய்வக பணிமனை கட்டிடங்கள், தூத்துக்குடி எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் ரூ.51 லட்சத்து 70 ஆயிரம் செலவில் கட்டப்பட்ட உணவுக்கூடம் என மொத்தம் ரூ.25 கோடியே 24 லட்சம் செலவில் கட்டப்பட்ட கட்டிடங்களை முதல்வர் பழனி சாமி திறந்துவைத்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x