Published : 08 Dec 2018 08:36 AM
Last Updated : 08 Dec 2018 08:36 AM

மதிமுக - விசிக இடையே கருத்து மோதல்: திமுக கூட்டணியில் மீண்டும் சலசலப்பு

திராவிட இயக்கம் தலித்களுக்கு செய்தது என்ன என்பது தொடர்பாக மதிமுக - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடையே ஏற்பட்டுள்ள மோதலால் திமுக கூட்டணியில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த திமுக பொரு ளாளர் துரைமுருகன், ‘‘மதிமுக வும், விசிகவும் திமுக கூட்டணி யில் இல்லை’’ என்றார். அதற்கு பதிலளித்த மதிமுக பொதுச்செய லாளர் வைகோ, ''திமுக கூட்ட ணியில் மதிமுக உள்ளதா என்பதை மு.க.ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்'' என்றார்.

ஆனால், ஸ்டாலின் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதனால் திமுக கூட்டணியில் பெரும் சலசலப்பு எழுந்தது. அதைத் தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவனும், வைகோவும் அடுத்தடுத்து ஸ்டாலினை சந்தித்து தாங்கள் திமுக கூட்டணியில் இருப்பதாக உறுதிப்படுத்தினர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி யளித்த வைகோவிடம், திராவிட இயக்கம் தலித்களுக்கான அதி காரப் பகிர்வை தந்துள்ளதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிப்பதை தவிர்த்த வைகோ, இதுபோன்ற கேள்விகள் மூலம் திராவிட இயக்கத்துக்கும், தலித்களுக்கும் இடையே மோதலை ஏற்படுத்த முயற்சிப் பதாக குற்றம்சாட்டினார். இது சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.

இந்நிலையில் இதுதொடர்பாக முகநூலில் பதிவிட்ட விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, ‘தலித்கள் அதிகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பினாலே அதற்கு பதில் சொல்லக்கூட வைகோ மறுப்பது எந்தவிதமான பார்வை? பதற்றமடைவது, கோபமடைவது எதைக் காட்டுகிறது? இடைநிலை சாதிகளுக்கு அதிகாரம் வந்ததைப் போல தலித்களுக்கு வந்ததா என்ற கேள்வி மாற்றத்தை விரும்பும் ஒவ்வொருவரிடத்தில் இருந்தும் பீறிடும் கேள்விகள். தலித்களுக்கு அதிகாரம் கிடைக் காதவரை இதுபோன்ற கேள்விகள் வரத்தான் செய்யும். இதற்கு கோபமோ பதற்றமோ அடைந்தால் சந்தேகம்தான் எழும்’ எனக் கூறியிருந்தார்.

இதனால் கோபமடைந்த வைகோ, “வன்னியரசுவை இதுபோல பதிவிட தூண்டியது யார்?” என கேள்வி எழுப்பினார். அதைத் தொடர்ந்து தனது பதிவை முகநூலில் இருந்து வன்னியரசு நீக்கினார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த திருமாவளவன், “வைகோவின் கோபம் என் மீதா, வன்னியரசு மீதா? வன்னியரசுவின் பதிவு அவரது சொந்தக் கருத்து. நான் எது சொல்வதாக இருந்தாலும் நேராகவே செல்வேன். யாரையும் தூண்டிவிட மாட்டேன்” என்றார்.

‘ஈழவாளேந்தி’ பதில்

இந்நிலையில், மதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து ‘ஈழவாளேந்தி’ என்ற பெயரில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை யில், ‘தனது முகநூல் பதிவு மூலம் வைகோவை ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்கு எதிரானவராக சித்தரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட வன்னியரசை வைகோ பொறுத் துக் கொள்ளலாம்.

ஆனால், மதிமுகவினரால் பொறுக்க முடியாது. தன் வீட்டில் தலித் பிள்ளைகள் பணியாளர் களாக இருக்கிறார்கள் என்று வைகோ கூறியதை, ஆதிக்க மனப்பான்மை, நிலப்பிரபுத்துவ உளவியல் என்று வன்னியரசு கூறுவது அவரது அறியாமையைக் காட்டுகிறது.

நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் படம் திறக்க காரணமானவர் வைகோ. சாதி ஆணவக் கொலை களை தயவு தாட்சண்யம் இன்றி வன்மையாகக் கண்டிப்பவர். மக்கள் நலக் கூட்டணியில் திருமாவ ளவனின் பெருமைகளை ஊர் ஊராக சென்று எடுத்துரைத்தவர். ஆதிக்க சக்திகளின் உள்நோக்க அரசியலுக்கு வன்னியரசு போன்ற வர்கள் பலியாவது பரிதாபத்துக் குரியது' என கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு மதிமுக - விசிக இடையே பொதுவெளியில் நடக் கும் மோதல் திமுக கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x