Published : 04 Dec 2018 09:34 am

Updated : 04 Dec 2018 09:35 am

 

Published : 04 Dec 2018 09:34 AM
Last Updated : 04 Dec 2018 09:35 AM

பூவிருந்தவல்லி அருகே வட மாநிலத்தை சேர்ந்த மாடு கடத்தும் கும்பல் மீது மக்கள் சரமாரி தாக்குதல்

பூவிருந்தவல்லியில் சாலைகள், தெருக்களில் சுற்றித் திரியும் மாடு களை ஒரு கும்பல் வேனில் கடத்திச் சென்று, வேறு பகுதிகளில் விற் பனை செய்வதாக பரவலாக புகார் எழுந்தது. இது மாடு வளர்ப்பவர் கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத் தியது.

இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு பூவிருந்தவல்லி அடுத்த வரதராஜபுரம் பகுதி யில் நின்றிருந்த மாடுகளை சிலர் பிடித்து வேனில் ஏற்றிக்கொண்டி ருந்தனர். அப்பகுதியினர் சந்தேகம் அடைந்து, அவர்களைப் பிடிக்க முயன்றனர்.

பொதுமக்கள் சுற்றிவளைப் பதை அறிந்த மர்ம நபர்கள் வேனில் தப்பிச் சென்றனர். மக்க ளும் விடாமல் பைக்குகளில் துரத் திச் சென்று மடக்கினர். வேனில் இருந்த 7 பேரையும் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.

பொதுமக்கள் பிடியில் ஒருவர் மட்டும் சிக்கிக்கொள்ள, மற்ற அனைவரும் தப்பினர். பிடிபட்டவரை அருகே உள்ள காவல் நிலையத்தில் மக்கள் ஒப்படைத்தனர். அவர் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

கடத்தலுக்கு பயன்படுத்திய வேன் கைப்பற்றப்பட்டுள்ளது. தலைமறைவான மற்றவர்களை போலீஸார் தேடுகின்றனர்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

மாடு கடத்தும் கும்பல்மக்கள் சரமாரி தாக்குதல்பொதுமக்கள் சுற்றிவளைப்பது

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author