Published : 08 Dec 2018 08:18 AM
Last Updated : 08 Dec 2018 08:18 AM

தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய இந்தியப் பெருங்கடலின் நிலநடுக்கோட்டு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருகிறது. அதன் தாக்கத்தால் அதே பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது. அது மேலும் வலுப்பெறவும் வாய்ப்புள்ளது.

ஏற்கெனவே தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. மேலும் மாலத் தீவு, லட்சத்தீவு பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை யும் நீடித்து வருகிறது. இவற் றின் காரணமாக தமிழகம், புதுச் சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப் பில்லை.

வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் சாத்தனூர் அணை, சத்தியமங்கலம் ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ., வேலூர் மாவட்டம் கலவை, கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x