‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ விழிப்புணர்வு கருத்தரங்கம்: பேப்பர் டீ கப்களுக்கு விலக்கு அளிக்க அரசு திட்டம் - அமைச்சர் கே.சி. கருப்பணன் தகவல்

‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ விழிப்புணர்வு கருத்தரங்கம்: பேப்பர் டீ கப்களுக்கு விலக்கு அளிக்க அரசு திட்டம் - அமைச்சர் கே.சி. கருப்பணன் தகவல்
Updated on
2 min read

பேப்பர் டீ கப்களில் உள்ள பிளாஸ்டிக்கின் தடிமனைக் குறைத்து, அவற்றுக்கு விலக்கு அளிக்க அரசு ஆலோசித்து வருவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ என்ற தலைப் பில் சென்னை மண்டல அளவி லான விழிப்புணர்வு கருத்தரங்கம், கிண்டியில் உள்ள வாரிய அலு வலக அரங்கில் நேற்று நடைபெற் றது. அதில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பங் கேற்று, பிளாஸ்டிக் தடை குறித்த விழிப்புணர்வு வாகன பிரச் சாரத்தைத் தொடங்கிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட் களுக்கான மாற்று குறித்த கண் காட்சியைத் திறந்து வைத்தார். பின்னர் கருத்தரங்கைத் தொடங்கிவைத்து பேசியதாவது:

பிளாஸ்டிக் பொருட்களால் ஏற் படும் மாசுவைத் தடுக்க அரசு பல் வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டது. அது பலனளிக்காத தால், மறைந்த முன்னாள் முதல் வர் ஜெயலலிதா, பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைத்தார். அக்குழு அறிக்கையின் அடிப்படை யில் தற்போது 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை போன்ற பெருநகரங் களில் திடக்கழிவு மேலாண்மைக்கு பிளாஸ்டிக் பெரும் சவாலாக உள்ளது. இந்தத் தடை மூலம், மேலாண்மை எளிதாகும். மாற்றுப் பொருட்களைப் பயன் படுத்தும்போது விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும்.

திடக்கழிவில் இருந்து மின் சாரம் தயாரிக்கவும் அரசு திட்ட மிட்டுள்ளது. பேப்பர் டீ கப்களில் வருடப்படும் விளாஸ்டிக்கின் தடிமனை 6 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாகக் குறைத்து அவற் றுக்கு விலக்கு அளிக்க அரசு ஆலோசித்து வருகிறது. பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த 6 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இனி அவகாசம் கிடையாது. 1-ம் தேதி பிளாஸ்டிக் தடை அமலாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசும்போது, “100 ஆண்டுகளுக்கு மேல் பிளாஸ் டிக்கைப் பயன்படுத்தி வருகிறோம். பிளாஸ்டிக்கால் உயிர் சூழல், நிலத்தடிநீர், ஓசோன் படலம் பாதிக் கப்படுகிறது. அதனால் பிளாஸ் டிக்கைக் கைவிடுவது காலத்தின் கட்டாயம். எனவே பிளாஸ்டிக் தடைக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்றார்.

மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஷம்பு கல்லோலிகர் பேசும் போது, “பிளாஸ்டிக் மூலம் 100-க்கும் மேற்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. அதில் 14-க்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள் ளது. இவை அனைத்தும் தவிர்க் கக்கூடிய பொருட்கள், அவற்றுக்கு மாற்று உள்ளன என்பதை அறிந்தே, அவற்றுக்கு அரசு தடை விதித்துள்ளது” என்றார்.

இந்தக் கருத்தரங்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன், பிளாஸ்டிக் தடையை அமல்படுத்தும் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் சந்தோஷ் பாபு, பி.அமுதா மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in