Published : 20 Dec 2018 08:39 AM
Last Updated : 20 Dec 2018 08:39 AM

உதகை குதிரைப் பந்தய மைதானத்தில் வருவாய்த் துறை அதிகாரிகள் நுழைய தடை

உதகை குதிரைப் பந்தய மைதானத்தின் ஒரு பகுதியில் வருவாய்த் துறை அதிகாரிகள் நுழைந்து வாகன நிறுத்தும் இடமாக மாற்றுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

உதகை பேருந்து நிலையம் அருகேயுள்ள குதிரைப் பந்தய மைதானம் அரசிடம் இருந்து மெட்ராஸ் ரேஸ் கிளப்பால் நீண்ட கால குத்தகைக்கு பெறப்பட்டுள் ளது. மொத்தமுள்ள 54.74 ஏக்கரில் உதகை கால்வாய்க்கு நிலம் எடுக் கப்பட்டது போக, 52.34 ஏக்கர் நிலம் குதிரைப் பந்தய பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில், இதில் 5 ஏக்கர் நிலத்தை வாகன நிறுத்தமாக பயன்படுத்தப் போவ தாக கூறி, உதகை மாவட்ட ஆட்சி யர் குதிரைப் பந்தய மைதான நிர்வாகத்திற்கு கடந்த நவம்பர் 30-ம் தேதி நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு பதிலளிக்க அவகாசம் கேட்டுள்ள நிலையில், வருவாய்த் துறை சார்பில் அதிகாரிகள் உள்ளே நுழைந்து வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வருவாய்த்துறையின் இந்த நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மெட்ராஸ் ரேஸ் கிளப் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, வருவாய்த் துறையின் நடவடிக்கைக்கு ஜன. 10-ம் தேதி வரை இடைக்கால தடை விதித்து நேற்று உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, கிளப் சார்பில் நோட்டீ ஸுக்கு பதில் அளிக்க கூடுதல் அவகாசம் கோரியிருந்த நிலையில், வருவாய்த்துறை அவசரம் அவசர மாக மைதானத்துக்குள் நுழைந்து வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக் கும் பணியில் ஈடுபட்டதற்காக நீதி பதி தனது அதிருப்தியை வெளிப் படுத்தினார். கிளப் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு உதகை மாவட்ட கலெக்டர் பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகிகள் கூறியது: நீலகிரி மாவட்ட நிர்வாகம், குதிரைப் பந்தய மைதானத்தின் ஒரு பகுதி வாகன நிறுத்துமிடமாக மாற்றப்படும் என அறிவித்துள்ளது. இந்த நிலையில் நேற்று பொக்லைன் இயந்திரங்கள் மைதானத்துக்குள் கொண்டு வரப் பட்டன. இதனால், குதிரைகள் ஓடு தளம் மற்றும் மைதானம் சேதமடைந் துள்ளது. மேலும், கடந்த ஆண்டு நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின்போது 600 பேருந்துகள் மற்றும் வாகனங்கள் குதிரைப் பந்தய மைதானத்தில் நிறுத்தப் பட்டன. அப்போதும், குதிரைப் பந்தய மைதானம் மற்றும் குதிரை கள் ஓடுதளம் சேதமடைந்தது.

ஓடுதளம் சேதமடைந்ததால், நடப்பாண்டு குதிரைப் பந்தயங்கள் வெகுவாக குறைக்கப்பட்டன. அடுத்த ஆண்டு குதிரைப் பந்தயத் துக்காக ஓடுதளத்தை சீரமைப்பது சவாலானதாகவும், சிரமமாகவும் இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நிலம் கையகப்படுத்தப்பட்ட தற்கு எதிராக தடையாணை பெறப் பட்டுள்ளது குறித்து வருவாய்த் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “நீதிமன்ற உத்தரவு தங்க ளுக்கு கிடைக்காததால் கருத்து கூற முடியாது” என்றனர். மேலும், “வருவாய்த் துறைக்கு சொந்தமான நிலம், மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. வாகன நிறுத்துமிடத்துக்காக நிலம் மட்டுமே சமன்படுத்தப்பட்டது. குதிரைப் பந்தய ஓடுதளம் சேதமடையவில்லை” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x