Published : 12 Dec 2018 09:51 AM
Last Updated : 12 Dec 2018 09:51 AM

இரு சக்கர வாகனம் ஓட்டும்போது போலீஸார் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்: டிஜிபி டி.கே. ராஜேந்திரன் அறிவிப்பு

இரு சக்கர வாகனம் ஓட்டும் போலீஸார் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று டிஜிபி டி.கே. ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதா வது:

ஈரோடு மாவட்டத்தில் பணிபுரிந்த தலைமைக் காவலர் எஸ்.ஆறுமுகம், சத்தியமங்கலம் அருகே இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது ஏற்பட்ட சாலை விபத்தில், கீழே விழுந்து தலையில் காயம் அடைந்து இறந்து விட்டார். ஒருவேளை அவர் ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டியிருந்தால் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு உள்ளது.

எனவே, உன்னதமான காவல் பணியில் ஈடுபடும் போலீஸார் அனைவரும் பணியின்போதும் மற்ற நேரங்களிலும் இரு சக்கர வாகனம் ஓட்டும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிந்துதான் செல்ல வேண்டும். போலீஸார், அமைச்சுப் பணியாளர்கள், அதிகாரிகள் உட்பட அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.

மேலும், 4 சக்கர வாகனம் ஓட்டும் போலீஸார், அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். செல்போன் பேசிக்கொண்டு காவல் துறையினரே வாகனம் ஓட்டக்கூடாது. சாலை விதிகளை, காவல் துறையைச் சேர்ந்த அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

சாலை விதிகளை மீறும் காவல் துறையினர் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.

மேலும், இதுதொடர்பாக அனைத்து காவல் நிலையங் களுக்கும் சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x