

பிரதமர் நரேந்திர மோடிக்கு நாளை (செப்டம்பர் 17) பிறந்தநாள். இதனையொட்டி, பிரதமர் மோடிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில் "தேமுதிக சார்பில் என் இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
நமது இந்திய நாடு வல்லரசாக மாறுவதற்கு தங்களின் நிர்வாகத் திறமை மிகு தலைமையும், அரசை வழி நடத்தும் ஆற்றலும் காரணமாக அமையும் .
எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு நீண்ட ஆயுளையும், பூரண நலத்தையும் அருள மனப்பூர்வமாக வேண்டுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.