Published : 28 Dec 2018 10:35 AM
Last Updated : 28 Dec 2018 10:35 AM

எச்ஐவி, எய்ட்ஸ் விழிப்புணர்வு குறைந்துவிட்டது: டாக்டர் ஜெயா ஸ்ரீதர் கவலை 

எச்ஐவி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு குறைந்துவிட்டதாக ரீச் அமைப்பின் பப்ளிக் ஹெல்த் கன்சல்டன்ட் டாக்டர் ஜெயா ஸ்ரீதர் கவலை தெரிவித்துள்ளார்.

சாத்தூரில் கர்ப்பிணிக்கு, எச்ஐவி பாதிப்புடன் கூடிய ரத்தம் ஏற்றப்பட்டது குறித்து, இந்தியா வில் முதலில் எச்ஐவி பாதிப்பை கண்டுபிடித்த டாக்டர் சுனிதி சால மன் குழுவில் இருந்தவரும், தமிழ் நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் - ரத்த பரிமாற்ற குழுமம், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் மூலம் முன்பு எச்ஐவி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தவரும், தற்போது ரீச் (REACH) அமைப்பின் பப்ளிக் ஹெல்த் கன்சல்டன்டுமான டாக்டர் ஜெயா தர் கூறியதாவது:

கொடையாளர்களிடம் இருந்து பெறப்படும் ரத்தத்தை உரிய பரி சோதனைக்கு பின்னர் ரத்த வங்கி யில் சேமித்து வைக்க வேண்டும். பரிசோதனையின்போது ரத்தத்தில் எச்ஐவி தொற்று உள்ளிட்ட கிருமி கள் இருந்தால், அந்த ரத்தத்தை அழித்துவிட வேண்டும். ரத்த வங்கி யில் சேமித்து வைத்த ரத்தத்தை ஒருவருக்கு ஏற்றுவதற்கு முன்பு மீண்டும் ஒருமுறை பரிசோதனை செய்ய வேண்டும். இந்த நடைமுறை சரியாக கடைபிடிக்கப்படாததால் கர்ப்பிணி பாதிக்கப்பட்டுள்ளார்.

2002-க்கு முன்பு கொடையாளர் களிடம் இருந்து பெறப்படும் ரத்தத்தை பரிசோதனை செய்து நல்ல ரத்தம் மட்டும் தேவையான வர்களுக்கு ஏற்றப்பட்டு வந்தது. பரிசோதனையின்போது ரத்தத்தில் எச்ஐவி தொற்று இருந்தால், சம்பந் தப்பட்ட நபருக்கு தெரிவிக்கப் படாது. அந்த காலக்கட்டத்தில் ரத்த தட்டுப்பாடு அதிகமாக இருந்த தால், அதுபோன்ற நடைமுறை கடைபிடிக்கப்பட்டது. இதை அடுத்து போதுமான அளவு ரத்தம் தானமாக கிடைத்ததால், 2002 முதல் ஒருவர் தானமாக வழங்கிய ரத்தத்தில் எச்ஐவி தொற்று இருந் தால், அந்த நபரை அழைத்து ஆலோசனை வழங்கி எச்ஐவி தொற்று இருப்பதை சொல்வது வழக்கமாக உள்ளது. ஆனால், இந்த சம்பவத்தில் ரத்ததானம் செய்தவருக்கு 2016-ல் எச்ஐவி பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப் பட்டும், அவருக்கு தெரிவிக்காமல் விட்டுவிட்டனர்.

எச்ஐவி, எய்ட்ஸ் குறித்த விழிப் புணர்வு தற்போது குறைந்துள்ளது. இந்நோய் குறித்து எல்லோருக்கும் தெரிந்துவிட்டதால், விழிப்புணர் வில் அதிகம் கவனம் செலுத்த வில்லை. இந்நோயை ஓரளவு கட்டுப்படுத்திவிட்டதால், நோய் குறித்த முக்கியத்துவமும் குறைந்து விட்டது. நோய் இன்னமும் இருக் கிறது. அதனால், எச்ஐவி, எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்கள் கவலைப்பட வேண்டாம். மாத்திரை, மருந்துகள் இருக்கிறது. சிகிச்சை பெற்றால் பல ஆண்டுகள் நலமுடன் இருக்கலாம் என்று அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மக்களிடம் தொடர்ந்து விழிப் புணர்வு ஏற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

ரத்தம் மூலம் எச்ஐவி பரவும் சம்பவங்கள் முன்பு நடந்திருக்க லாம். அப்போதெல்லாம் விழிப் புணர்வும், பரிசோதனை கருவிக ளும் போதிய அளவில் இல்லை. தற்போது நவீன பரிசோதனை வசதிகள் உள்ளன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x