Published : 09 Dec 2018 09:42 AM
Last Updated : 09 Dec 2018 09:42 AM

மதுரையில் ஜல்லிக்கட்டு திருவிழா ஏற்பாடுகள் தொடக்கம்: முதல் போட்டி நடக்கும் அவனியாபுரத்தில் காளைகளுக்கு பூஜை 

பொங்கல் பண்டிகையையொட்டி முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள மதுரை அவனியாபுரத்தில் போட்டிக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. காளையார் கோயிலில் அலங்கரிக் கப்பட்ட காளைகளுக்கு நடை பெற்ற சிறப்பு பூஜையில், தை மாத ஜல்லிக்கட்டு எந்தத் தடையும் இன்றி நடைபெற வேண்டும் என கிராம மக்கள் பிரார்த்தனை செய்தனர்.

தமிழர்களின் வீர விளையாட் டான ஜல்லிக்கட்டு, பொங்கல் பண்டிகையையொட்டி தை மாதத் தில் தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு 500-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. தமிழகத்திலேயே குறிப்பாக பெரிய அளவிலான ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில்தான் முதலில் நடக்கும். அதற்கு அடுத்தடுத்த நாட்களில் பாலமேடு, அலங்கா நல்லூர் மற்றும் தமிழகத்தின் மற்ற கிராமப் பகுதிகளில் ஜல்லிக்கட்டு களைகட்டும்.

ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதி மன்றம் 2016-ம் ஆண்டு தடை விதித் தது. இத்தடை 2017-ம் ஆண்டும் தொடரவே அலங்காநல்லூரில் கிராம மக்களும், ஜல்லிக்கட்டு வீரர் களும், ஆர்வலர்களும் ‘வாடிவாசல் திறக்கும் வரை வீட்டு வாசலை மிதிக்க மாட்டோம்’ என்ற முழக்கத் துடன் போராட்டம் செய்தனர்.

போலீஸார் அவர்களைக் கைது செய்ததை அடுத்து, அவர்களுக்கு ஆதரவாக கன்னியாகுமரி முதல் சென்னை மெரினா கடற்கரை வரை இளைஞர்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தால் தமிழகமே ஸ்தம்பித்ததால் தமிழக அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்து மத்திய அரசு உதவியுடன் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில், பொங்கல் பண்டி கையையொட்டி தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு நடக்கும் மதுரை அவனியாபுரத்தில் உள்ள காளையார் கோயிலில், தென் கால் பாசன விவசாயிகளும், சுற்றுவட்டார கிராம மக்களும் நேற்று முன்தினம் சிறப்பு வழிபாடு நடத்தினர். தை முதல் நாளில் தடை இன்றி ஜல்லிக்கட்டு நடக்கவும், வரும் ஆண்டிலும் மழை பெய்து, விவசாயம் செழிக்கவும் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

இந்த கோயிலில் சுயம்புவாக உருவான ஜல்லிக்கட்டு காளை முகம் கொண்ட சுவாமி முன்பு, ஜல்லிக்கட்டு காளைகளை அலங்கரித்து சிறப்புப் பூஜைகள் செய்தனர். அதன் பிறகு கிராம மக்களுக்கு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழா கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதையடுத்து, அவனியாபுரத் தில் ஜல்லிக்கட்டுக் காளைகளுக்கு அதன் உரிமையாளர்கள் தீவிர பயிற்சியை தொடங்கினர். அதே போல், வீரர்களும் காளைகளை அடக்கும் பயிற்சியில் ஈடுபட்டுள்ள னர்.

இதுகுறித்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு குழுத் தலைவர் ஏ.கே.கண்ணன் கூறியதாவது:

பொங்கல் நாளில் முதல் ஜல் லிக்கட்டு எங்க ஊரில் நடப்பது எங்களுக்கு பாரம்பரியமாகக் கிடைக்கும் பெருமை. அந்த விளையாட்டு இந்த ஆண்டும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நடக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு நடக்காத காலங் களில் மழை பெய்யாமல், விவ சாயம் பொய்த்துப்போனது. கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு எந்த தடையும் இல்லாமல் நடந்ததால் தான் இந்த ஆண்டு போதிய மழை பெய்து, வைகை அணை நிரம்பி விவசாயமும் செழித்தது. அதனால், வரும் பொங்கல் நாளிலும் ஜல்லிக்கட்டு எந்த பிரச்சினையும் இல்லாமல் நடக்க வேண்டும் என்பதற்காக காளையார் கோயிலில் ஜல்லிக்கட்டு காளைகளுக்குப் பூஜை செய்து சுவாமி தரிசனம் செய்தோம்.

இந்த விழாவை ஆண்டுதோறும் நடத்தி வருகிறோம். தற்போது நடைபெற்ற இந்த விழாவுடன் எங்கள் ஊரில் ஜல்லிக்கட்டுக் கான வேலைகளை ஆரம்பித்து விட்டோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x