

ஈரோடு மாவட்டத்தில் நம்பியூர், கோபி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:
‘‘அரையாண்டுத் தேர்வு மதிப்பெண் என்பது வேறு பள்ளியிலோ, கல்லூரி யிலோ சேர்வதற்கான மதிப்பீடு அல்ல. ஆகவே, புயல் பாதித்த மாவட்டங்களில் வழக்கம்போல், அரையாண்டுத் தேர்வு நடத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு உண்டு. இந்த தேர்வு இல்லை என்று கூறும் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநிலம் முழுவதும் உள்ள பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு 11.17 லட்சம் மிதிவண்டிகள் அரசின் சார்பில் இலவசமாக வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு தரமற்ற மிதிவண்டி எங்கு வழங்கப்பட்டாலும், அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். ஜன.1 முதல் நடுநிலைப்பள்ளிகளில் செயல்படும் அங்கன்வாடி மையங்களில், மழலையர் பள்ளிகள் தொடங்கப் படும். பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஜனவரி 10-ம் தேதிக்குள் மடிக்கணினி வழங்கப்படும். இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கு ஸ்மார்ட் கார்டு முறை அமல்படுத்தப்பட்டுள் ளது. ஸ்மார்ட் கார்டு பெற்ற மாணவரின் சிம்கார்டினைப் போட்டவுடன், மாற்றுச் சான்றிதழ் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.