

சிங்கப்பூர் இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் (சிஃபா) சொசைட்டி யின் 3 நாள் கலை விழாவான ‘அலங்கார்’, சென்னை மியூசிக் அகாடமியில் வரும் 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடக்க உள்ளது. முதல்முறையாக, சென்னையில் உள்ள சிங்கப் பூர் தூதரகத்துடன் இணைந்து இந்த விழாவை சிஃபா நடத்து கிறது.
சிஃபா ஆர்ட்ஸ் சொசைட்டி யில் இசை படிக்கும் மாணவர் கள் வழங்கும் முத்தாய்ப்பான ‘லய சங்கமம்’ நிகழ்ச்சியை 7-ம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை சிங்கப்பூர் தூதர கத்தின் தலைவர் ராய் கோ தொடங்கிவைக்கிறார்.
பாரம்பரிய இந்திய இசைக் கருவிகளுடன், சீன, மலேசிய மற்றும் மேற்கத்திய இசைக் கருவிகளின் கூட்டிசைவாக இந்த லய சங்கமத்தை வடிவ மைத்திருப்பவர் குரு ஸ்ரீகாந்த். முதன்முதலாக இந்த முறை தென்னிந்திய மற்றும் வட இந்திய பாணியில் இந்துஸ்தானி இசையை சிதார் வாத்தியத்தில் வெளிப் படுத்துவதோடு, அதற்கேற்ற கதக் நடன நிகழ்ச்சியையும், அதனோடு ஒத்திசைவாக கர்னாடக இசை, பரதநாட்டிய நிகழ்ச்சியையும் நடத்த உள்ளனர்.
சிஃபாஸ் அகாடமி
சிங்கப்பூரில் 1952-ம் ஆண்டு முதல் இந்தியக் கலைகளை மாணவர்களுக்கு கற்றுத் தரும் அமைப்பாக விளங்குகிறது சிஃபாஸ் கலை அகாடமி. ஏறக்குறைய 15 துறைகளின் கீழ் 2,500 மாணவர்கள் கலை சார்ந்த படிப்புகளை படிக்கும் நிறுவனம் என்னும் பெருமை யைக் கொண்டது இந்த அமைப்பு.
கர்னாடக இசை, இந்துஸ் தானி, மலேசிய இசை, சீன பாரம்பரிய இசை, மேற்கு வங்கத்தின் கிராமத்து இசை, மேற்கத்திய இசை, கதக் நடனம், பரதநாட்டியம் எனப் பல கலைகளும், பல்வேறு இசைக் கருவிகளை அதன் பிரத்யேக நுணுக்கங்களுடன் வாசிக்கும் கலைஞர்களும் சங்கமிக்கும் நிகழ்வாக சிஃபாஸ் வழங்கும் ‘அலங்கார்’ நிகழ்ச்சிகள் இருக்கும். இந்தக் கலைகளின் சங்கமத்துக்கு அனுமதி இலவசம்.
இந்தியாவின் கலாச்சார தலைநகராக விளங்கும் சென்னை ரசிகர் களின் அன்பான பாராட்டு களைப் பெற சிங்கப்பூரில் இருந்து சிஃபாஸ் அகாடமி யில் பயிலும் மாணவர்களும், இளம் கலைஞர்களும், மூத்த இசைக் கலைஞர்களும் வரு கின்றனர். வித்தியாசமான ‘அலங்கார்’ நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க மியூசிக் அகாட மிக்கு சென்னை ரசிகர்களை வரவேற்கிறோம் என்று சிஃபாஸ் கலை அகாடமி தெரிவித்துள்ளது.