

தமிழக செய்தித் துறையில் பணிபுரிந்து வரும் டி.அம்பலவாணன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக ஆளுநரின் உத்தரவின் பேரில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் எம்.ராஜாராம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழக சுகாதாரத் துறையில் குடும்ப நலத்துறை இயக்குநரகத்தில் அயல்பணியில் துணை இயக்குநராக பணிபுரிந்து வரும் டி.அம்பலவாணன், பொது நலன் கருதி பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார். அதற்கான காரணம் பொதுநலன் கருதி வெளியிடப்படவில்லை.
தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) துணை விதிகள் 17-ன் படி அவர் உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீண்டும் பணியில் சேரும் காலம் வரையில், உரிய அனுமதியின்றி சென்னையை விட்டு வெளியில் செல்லக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பணியிடைநீக்கம் செய்யப்பட்ட அம்பலவாணன், ஒரு அரசியல் கட்சி வேட்பாளருடன் இடம்பெற்றிருந்த புகைப்படம் ஒரு நாளிதழில் வெளியானது. அதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.