

பகவான் யோகி ராம்சுரத் குமாரின் நூற்றாண்டு விழாவை யொட்டி, அவரது சிறப்பு தபால் உறை திருவண்ணாமலையில் நேற்று வெளியிடப்பட்டது.
திருவண்ணாமலையில் 42 ஆண்டுகள் வாழ்ந்து பக்தர் களுக்கு உபதேசம் மற்றும் அருளாசி வழங்கிய பகவான் யோகி ராம்சுரத்குமாரின் நூற்றாண்டு ஜெயந்தி விழா திருவண்ணாமலையில நடை பெற்று வருகிறது. ராம்சுரத் குமார் ஆசிரமத்தில் நடைபெறும் விழாவில் மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர சுவாமிகள் நேற்று முன்தினம் ஆன்மிக உரை யாற்றினார். இதையடுத்து 2-ம் நாள் விழா நேற்று காலை தொடங் கியது. யோகி ராம்சுரத்குமார் திருவுருவ சிலைக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடை பெற்றது.
அதன்பிறகு பகவான் யோகி ராம்சுரத்குமாரின் சிறப்பு தபால் உறை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆசிரமத் தலை வர் நீதிபதி அருணாசலம் வரவேற்றார். சிறப்பு தபால் உறையை தபால் துறை முதன்மை தலைவர் வெங்க டேஸ்வரலு வெளியிட, பரனூர் கிருஷ்ணபிரேமி சுவாமிகள் பெற்றுக் கொண்டார்.
இதையடுத்து, திருக்கோவிலூர் ஞானானந்தா நிக்கேதன் அறக்கட்டளைத் தலைவர் நித்யானந்தகிரி சுவாமிகள் மற்றும் மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர சுவாமிகள் ஆகியோரும் தபால் உறைகளை பெற்றுக் கொண்டனர். பின்னர் சுவாமிகள், ஆசி உரை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் பகவானின் பக்தர்கள் பலரும் திரளாக கலந்துகொண்டனர். ஆசிரமத் தின் ஆயுள் அறங்காவலர் மா.தேவகி நன்றி கூறினார். பகவா னின் உற்சவ மூர்த்தியின் கிரிவ லம் இன்று மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. மஹாரண் யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர சுவாமிகள் தொடங்கி வைக்கிறார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.