Published : 03 Dec 2018 09:28 AM
Last Updated : 03 Dec 2018 09:28 AM

சமூக நீதி, மொழிப்பற்று, தேசப்பற்றை வாழ்க்கையில் கடைபிடித்தவர் பாரதியார்: பொன்.ராதாகிருஷ்ணன் புகழாரம்

உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர் கள் சங்கம், சேவாலயா சார்பில் சென்னை திருநின்றவூரை அடுத்த கசுவா கிராமத்தில் பாரதி உலா நிகழ்ச்சி நேற்று நடந்தது. பாரதி யாரின் சிந்தனைகளை இளைய தலைமுறைக்கு கொண்டு சேர்க் கும் முயற்சியாக ஏற்பாடு செய்யப் பட்ட இந்நிகழ்ச்சியில், சேவாலயா நிறுவனர் முரளிதரன் வரவேற்றார். திரைப்பட இயக்குநர் விசு தலைமை வகித்தார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய இணை அமைச் சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசிய தாவது:

தமிழகத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய பெருமை பாரதிக்கு மட்டுமே உண்டு. பாரதி தனது பாடல்களில் குறைகளை மட்டும் கூறவில்லை. மாறாக, தீர்வையும் கூறி அதை தன் கண்முன்னே நடத்திக் காட்டினார். ‘பாப்பா பாட்டு’ மூலம் மிக உயர்ந்த கருத்துகளை எளிய முறையில் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறியுள்ளார்.

குழந்தைகளின் மனதில் வைரத் தைப் பதிக்கும் நிகழ்ச்சியாக இந் நிகழ்ச்சி அமைந்துள்ளது. சமூக நீதி, மொழிப்பற்று, தேசப்பற்று ஆகிய வற்றை கவிதைகளோடு நிறுத்தி விடாமல் வாழ்க்கையில் நடை முறைப்படுத்தியவர் பாரதியார். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

விழாவில் பேசிய நடிகர் டெல்லி கணேஷ், ‘‘இன்றைய தலை முறையினர் பாரதியார் பற்றியும், அவரது கவிதைகள் பற்றியும் நன்று தெரிந்து வைத்துள்ளனர். ஆனால், அவர் மாதிரி வாழ்ந்து காட்டுவது குறைவாக உள்ளது. எனவே, பாரதி காட்டிய வழியில் மாணவர்கள் நடக்க வேண்டும்’’ என்றார்.

ஸ்ருதிலயா நாட்டியப் பள்ளி இயக்குநர் பார்வதி பாலகிருஷ் ணன், சாயிசங்கரா மேட்ரிமோனி யல் குழும நிறுவனர் பஞ்சாப கேசன், உரத்த சிந்தனை சங்கத் தின் செயலர் உதயம் ராம் ஆகி யோர் விழாவில் பங்கேற்றனர். சேவாலயா பள்ளி மாணவ, மாணவி களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x