துப்புரவு பணியை தனியாரிடம் வழங்கும் டெண்டர் திறப்பு: ஒருவரும் டெண்டர் கோராததால் மாநகராட்சி நிர்வாகம் ஏமாற்றம் - மறு டெண்டர் கோரவும் திட்டமிட்டுள்ளது.

துப்புரவு பணியை தனியாரிடம் வழங்கும் டெண்டர் திறப்பு: ஒருவரும் டெண்டர் கோராததால் மாநகராட்சி நிர்வாகம் ஏமாற்றம் - மறு டெண்டர் கோரவும் திட்டமிட்டுள்ளது.
Updated on
1 min read

சென்னை மாநகராட்சியில் 8 மண்டலங்களில் துப்புரவு பணியை தனியாரிடம் வழங்குவது தொடர்பான ஆன்லைன் டெண்டர் நேற்று திறக்கப்பட்டது. அதில் யாரும் டெண்டர் கோரவில்லை என தெரிவந்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் தினமும் 5 ஆயிரத்து 400 டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. இப்பணியில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்பட 19 ஆயிரத்து 200 தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மாநகராட்சியில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் ஏற் கெனவே அடையார், தேனாம் பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் குப்பை அகற்றும் பணி தனியாரிடம் விடப்பட்டுள்ளது. மேலும் 8 மண்டலங்களில் வீடு வீடாக குப்பை சேகரித்தல், அதை கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லுதல் ஆகிய பணிகளை 8 ஆண்டுகளுக்கு செய்யும் பணிகளை தனியாரிடம் வழங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதற்காக ரூ.1546 கோடி மதிப்பில் மாநகராட்சி நிர்வாகம் ஆன்லைன் டெண்டர் கோரி இருந்தது.

டெண்டர் திறப்பு தள்ளிவைப்பு

இதற்கு மாநகராட்சி செங்கொடி சங்கத் தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். அதன் காரணமாக டெண்டர் திறப்பது இருமுறை தள்ளி வைக்கப்பட்டன. இருப்பினும் டெண்டரை திறப்பதில் மாநக ராட்சி நிர்வாகம் உறுதியாக இருந்தது. கடைசியாக நேற்று மாலை டெண்டர் திறப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

தொழிலாளர்கள் முற்றுகை யிட வாய்ப்புள்ளது என்பதால் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பின்னர் ஆன்லைன் டெண்டர் திறக்கப் பட்டது. அதில், யாரும் டெண்டர் கோரி விண்ணப்பிக்கவில்லை என தெரியவந்துள்ளது.

இதனால் மாநகராட்சி நிர்வாகம் ஏமாற்றம் அடைந்தது. மறு டெண்டர் கோரவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in