Published : 11 Dec 2018 08:01 AM
Last Updated : 11 Dec 2018 08:01 AM

பிளாஸ்டிக் தடை குறித்த விழிப்புணர்வு வாகன பிரச்சாரம்: முதல்வர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக்குக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை முதல்வர் கே.பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை அமல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான அரசாணை ஜூன் 26-ம் தேதி வெளியிடப்பட்டது. தொடர்ந்து, பிளாஸ்டிக் தடையை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்த தமிழக தலைமைச் செயலர் தலைமையில் 10 உறுப்பினர்கள் கொண்ட வழிகாட்டும் குழு அமைக்கப்பட்டது. மூன்று மண்டல ஒருங்கிணைப்பாளர்களும் நியமிக் கப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த ஆக. 23-ம் தேதி தலைமைச் செயலகத்தில், ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ என்ற நிலையை உருவாக்க, மாநில அளவிலான பிரச்சாரத்தை தொடங்கி வைக்க, அதற்கான இலச்சினையை முதல்வர் அறிமுகப்படுத்தினார். அத்தடன், ‘www.plasticpollutionfreetn.org’ என்ற வலைதளம் மற்றும் கைபேசி செயலியை தொடங்கி வைத்தார். அத்துடன் விளம்பர தூதரையும் அறிமுகப்படுத்தி, சூழலுக்கு உகந்த பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கும் தொழில்முனைவோருக்கு காசோலையையும் வழங்கினார். இதன் தொடர்ச்சியாக, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த நடமாடும் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வனம், வன உயிரின பாது காப்பு, வன உயரினங்களிடம் இருந்து பொதுமக்களை பாதுகாத் தல் போன்ற பணிகளில் மிகச்சிறந்த முறையில் பணியாற்றும் வனத் துறை அலுவலர்கள் மற்றும் பணி யாளர்களுக்கு ‘மாண்புமிகு முதல மைச்சர் விருது’ வழங்கப்படுகிறது. விருதுடன் வனக்காவலர், வனக் காப்பாளர்களுக்கு ரூ.2 ஆயிரம், வனவர் மற்றும் வனச்சரகர்களுக்கு ரூ.3 ஆயிரம், உதவி வனப்பாது காவலருக்கு ரூ.5 ஆயிரமும் வழங் கப்படுகிறது.

அந்த வகையில், 2010-11-ம் ஆண்டுக்கு 14 பேர், 2013-14-ம் ஆண் டுக்கு 12 பேர் என 26 வனத் துறை அலுவலர் மற்றும் பணியாளர் களுக்கு முதல்வர் கே.பழனிசாமி விருதுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.சி.கருப்பணன், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், செயலர் ஷம்பு கல்லோலிகர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x