Published : 03 Dec 2018 09:38 AM
Last Updated : 03 Dec 2018 09:38 AM

நமது நாகரிகம் நெருக்கடியான நிலையில் உள்ளது: பயங்கரவாதம், உள்நாட்டுப் போருக்கு எதிராக நாம் போராட வேண்டும் - குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அழைப்பு

பயங்கரவாதம், உள்நாட்டுப் போர் போன்ற வன்முறைக்கு எதிராக போராட வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

பகவான் மகாவீர் அறக்கட்டளை சார்பில் 21-வது மகாவீர் விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடந்தது. விழாவில் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் பிரசான்சந்த் ஜெயின் வரவேற்புரை ஆற்றினார். விழாவின் கையேட்டை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் விலங்குகள் நல ஆர்வலர் ஷிரானி பெரைரா, மருத்துவத்தில் சிறப்பாக பணி யாற்றி வரும் பி.சி.பராக், சமூக சேவகர் இந்திரமணிசிங் ஆகியோ ருக்கு விருதுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை சிறப்பு விருந்தினராக பங்கேற்ற குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு வழங்கினார். இந்த விருது டன் தலா 3 பேருக்கும் ரூ.10 லட்சத்துக்கான காசோலை வழங் கப்பட்டன. மேலும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவார ணமாக ரூ.10 லட்சத்துக்கான காசோலை அமைச்சர் ஜெயக் குமாரிடம் வழங்கப்பட்டது.

பின்னர் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:

இந்தியாவின் தொன்மையான நாகரிகம், அறிவுக்கும் ஞானத்துக்கும் ஊற்றுக் கண் ணாக திகழ்ந்தது. கணிதத்தில் பூஜ்யத்தையும் எண்களையும் கண்டுபிடித்த பெருமை இந்தியா வின் தலைசிறந்த கணிதமேதை ஆரியபட்டாவைச் சாரும். அறிவூட்டலின் ஆலயங்களாக திகழ்ந்த தட்சசீலம், நாளந்தா பல்கலைக் கழகங்கள் இந்தியாவின் பெருமையை பறைசாற்றுகின்றன. மழைநீர் சேமிப்பு முதல் சிக்கலான அறுவை சிகிச்சை வரை, விமானம் தயாரிப்பு மற்றும் வானூர்தி இயக்கவியல் முதல் உலோகவியல் வரை மனித குலத்தின் பல்வேறு துறைகளில் இந்திய நாகரிகம் பரிணமித்திருக்கிறது.

உலகின் கலாச்சார தலைநகராக இந்தியா திகழ்ந்தது. அன்பு, அமைதி, சகிப்புத்தன்மை, சகோதரத்துவம், அறிவின் ஊற்று என்ற மனிதகுல மாண்புகளின் தோற்றுவாயாக, உலகுக்கே போதிக்கும் ஆசானாக இந்தியா விளங்கியது. யாருக்கும் தீங்கி ழைக்காமல், ஆசைகளை துறத் தலே மனிதகுல விடுதலைக்கும், மகிழ்ச்சிக்கும் வழிவகுக்கும் என்று பகவான் மகாவீர் போதித்தார்.

நாம் இன்று பரபரப்பான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டி ருக்கிறோம். பயங்கரவாதம், உள்நாட்டுப் போர் போன்ற வன் முறைக்கு எதிராக போராட வேண் டும். நமது நாகரிகம் இன்று நெருக் கடியான நிலையில் நிற்கிறது. நமது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும். நம்மை இந்தியர்களாக காட்டும் தனித்தன்மை எது என்பதை நாம் ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டும். நமது தொன்மையான பண்புகளை மீண்டும் ஆய்வு செய்து அவற்றில் எது தற்கால வாழ்வுக்கு பொருத்தமானதோ அதனை கண்டறிந்து தேர்ந்தெடுக்க வேண் டும். ஏனெனில் நமது மகிமையான நாகரிகமே மனிதகுல மாண்புக்கும் அறிவாற்றலுக்கும் மையப் புள்ளியாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில், அமைச்சர் ஜெயக் குமார், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பகவான் மகாவீர் அறக்கட்டளை அறங்காவலர் வினோத்குமார் ஜெயின் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற னர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x