வங்கிச் சேவை பாதிக்காமல் இருக்க சங்கப் பிரதிநிதிகளிடம் பேச வாசன் வலியுறுத்தல் 

வங்கிச் சேவை பாதிக்காமல் இருக்க சங்கப் பிரதிநிதிகளிடம் பேச வாசன் வலியுறுத்தல் 
Updated on
1 min read

வங்கி ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றவும், வங்கிகள் தொடர்ந்து இயங்கவும், பொதுமக்களுக்கான வங்கிச் சேவை தொடரவும் வங்கி ஊழியர் சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ஊதிய உயர்வு, ஓய் வூதியத்தில் பழைய முறையை கடைபிடித்தல், வங்கிகள் இணைப்புக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், டிச.26-ம் தேதி நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பர் என்று தெரிகிறது. இதனால் வங்கிச் சேவை முடங்கும் அபாயம் உள்ளது. நாட்டில் பொதுத்துறை வங்கிகளின் சேவை தொய்வில் லாமல், தடையில்லாமல் தொடர்ந்து சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் எண்ணமாக உள்ளது.

எனவே, வங்கி ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றவும், வங்கிகள் தொடர்ந்து இயங்கவும், வங்கி ஊழியர் சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு உடனடியாக பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in