

புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு வழங்குவதற்காக அகமதாபாத்தில் இருந்து விரைவு ரயில் மூலம் தார்பாலின் ஷீட்கள் கொண்டு வரப்பட்டன.
‘கஜா’ புயலால் டெல்டா மாவட் டங்கள் உட்பட 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசு சார்பில் நிவாரணப் பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. புயலால் சேதமடைந்த வீடுகளில் தற்காலிக கூரை அமைக்க தார்பாலின் ஷீட்கள் வாங்கி வழங்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டி ருந்தார். அதன்படி, வெளிமாநிலங்களில் இருந்தும் தார்பாலின் ஷீட்கள் வாங்கப்பட்டு வருகின்றன.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து நவஜீவன் விரைவு ரயில் மூலம் 1,250 தார்பாலின் ஷீட்கள் நேற்று சென்னைக்கு கொண்டு வரப்பட்டன. ஒவ்வொன்றும் 24 அடி நீளம், 18 அடி அகலம் கொண்டது. இதற்கு ரயில்வே துறை எவ்வித சரக்குக் கட்டணமும் வசூலிக்கவில்லை.
இன்றும் 750 தார்பாலின் ஷீட்கள் கொண்டுவரப்பட உள்ளன. தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படும் இந்த ஷீட்களை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொண்டு சேர்க்கும் பணியை சென்னை ஃபார் டெல்டா என்ற அமைப்பின் நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளனர்.