

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக உள்ள பொருட்களை பயன்படுத்துவது தொடர்பாக சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறை சார்பில் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறை சார்பில் பிளாஸ்டிக் தடை மற்றும் தூய்மை இந்தியா திட்டம் தொடர்பான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, மணலி மண்டலத்தில் உள்ள சிபிசிஎல் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந் தது. அதில், தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
அவற்றுக்கு மாற்றாக பாக்கு மரத் தட்டுகள், வாழை இலை, துருப்பிடிக்காத எஃகு தட்டுகள், பாட்டில்கள், துணி மற்றும் சணல் பைகள், கண்ணாடி குவளைகள், காகித உறிஞ்சு குழல்கள் போன்றவற்றை பயன்படுத்துமாறு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, இனி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவ தில்லை என மாணவர்களும் ஆசிரியர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
மேலும், தூய்மை இந்தியா திட்டத்தின் முக்கிய நோக்கங்கள், டெங்கு கொசுக்களை ஒழிப்பது குறித்தும் மாணவர்களுக்கு விளக் கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநக ராட்சி சுகாதாரக் கல்வி அலுவலர் டி.ஜி.சீனிவாசன், மணலி மண்டல அலுவலர் எஸ்.சங்கர், செயற் பொறியாளர் ஸ்ரீகுமார், மண்டல நல அலுவலர் தவமணி, பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் தயாநந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.