அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்பவர்களுக்கு இலவச பட்டா: கிராமங்களில் 4 சென்ட், மாநகராட்சிகளில் 2 சென்ட் வழங்க தமிழக அரசு உத்தரவு

அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்பவர்களுக்கு இலவச பட்டா: கிராமங்களில் 4 சென்ட், மாநகராட்சிகளில் 2 சென்ட் வழங்க தமிழக அரசு உத்தரவு
Updated on
2 min read

அரசு புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு கிராமங்களில் 4 சென்ட், நகரங்களில் இரண்டரை சென்ட், மாநகராட்சி பகுதிகளில் 2 சென்ட் அளவுக்கு வீட்டுமனை பட்டா வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்து அரசாணை பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறி யிருப்பதாவது:

அனைத்து விதமான நீர்நிலை கள், உள்ளாட்சி அமைப்புகளின் சாலைகள், மாவட்ட, மாநில, தேசிய நெடுஞ்சாலைகள் போன்ற ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்களை தவிர்த்து பிற புறம் போக்கு நிலங்களில் குடியிருப்பு மூலம் 5 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமித்துள்ள தகுதியுள்ள நபர்களுக்கு வரன்முறைப்படுத்தி வீட்டுமனை பட்டா வழங்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

இதில், ஆக்கிரமிப்பு செய்துள்ள பயனாளிகளின் ஆண்டு வருமான வரம்பாக நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களுக்கு குடும்பத் துக்கு ஆண்டு வருமானம் ரூ.1 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ், நில மதிப்பின் அடிப்படையில், வீட்டு மனை பட்டா வழங்க நிதி அதிகார வரம்பாக, வட்டாட்சியர்- ரூ.50 ஆயிரம் வரை, வருவாய் கோட்டாட்சியர் ரூ.75 ஆயிரம் வரை, மாவட்ட வருவாய் அலுவலர் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை, மாவட்ட ஆட்சியர் ரூ.5 லட்சம் வரை, நில நிர்வாக ஆணையர் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் வரையும் அதற்கு மேல் அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஊரகப்பகுதிகளில் 4 சென்ட், நகரப்பகுதிகளில் இரண்டரை சென்ட், மாநகராட்சி பகுதிகளில் 2 சென்ட்டுக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கலாம். ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் வட்டாட்சியர், வட்ட தலைமை நில அளவையர் ஆகியோரை கொண்ட குழு சரிபார்த்து பட்டா வழங்கலாம்.

ஆட்சேபம் இல்லாத புறம் போக்கு நிலங்களில் கண்டறியப் பட்ட ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 66 குடியிருப்பு ஆக்கிரமிப்புகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கலாம். தடையாணை புத்தகத்தில் பதியப்பட்ட நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை பொறுத்தவரை, வருவாய் கோட்ட அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலரால் பதியப்பட்டிருந்தால், அதை மாவட்ட ஆட்சியர் விலக்கி தகுதியுள்ள நபர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கலாம். மாவட்ட ஆட்சியர் பதிவு செய்திருந்தால், மாவட்ட அளவிலான குழு விலக்களிப்பு அனுமதி பெற்று பட்டா வழங்கலாம்.

சென்னை மாநகர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங் களில் உள்ள சென்னை மாநக ருக்கு உட்பட்ட பகுதிகள், இதர மாநகராட்சி மற்றும் நகரப்பகு திகளில் வரன்முறைப்படுத்த உள்ள தடை தொடரலாம்.

மற்ற நகரங்களில் இந்த தடையை விலக்கி மாவட்ட அளவிலான குழு உரிய நடை முறைகளை பின்பற்றி வரன்முறை செய்யலாம்.

நீர்நிலை போன்ற ஆட்சேபகர மான புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலம் ஆக்கிரமிப்பு செய் துள்ளவர்களை அப்புறப்படுத்தி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரி யம் மூலம் அடுக்குமாடி குடியி ருப்புகளில் குடியமர்த்தலாம். இந்த சிறப்பு வரன்முறை திட்டம் 6 மாதத்துக்குள் செயல்படுத்தப்பட வேண்டும். ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோயில்களுக்கு மின் இணைப்பு கேட்டு கோயில் நிர்வாகம் விண்ணப்பித்தால், சம்பந்தப்பட்ட வட்ட துணை வட்டாட்சியர் தடையின்மை சான்று வழங்கலாம். இது தொடர்பாக அரசு தலைமை வழக்கறிஞரின் சட்டக் கருத்தை பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in