Published : 31 Dec 2018 08:26 AM
Last Updated : 31 Dec 2018 08:26 AM

அரசு மருத்துவமனையில் ரத்தம் செலுத்தப்பட்டதால் பெண்ணுக்கு எச்ஐவி பாதிப்பு என புகார்: தவறான தகவல் என சுகாதாரத்துறை அதிகாரி மறுப்பு

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த மேச்சேரி பகுதி கிராமத் தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு 2014-ல் மேச்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடந்தது. அப் போது, மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கியில் இருந்து பெறப்பட்ட ரத்தம் அந்த பெண்ணுக்கு செலுத்தப்பட்டது.

இதன்பின்னர் 2015-ல் கர்ப் பமடைந்த அந்த பெண் மேச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத் துக்கு பரிசோதனைக்காக சென் றார். அப்போது நடத்தப்பட்ட பரி சோதனையில் அவருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த பெண் ணின் கணவர் மற்றும் முதல் குழந் தைக்கு நடத்தப்பட்ட பரிசோத னையில் இருவருக்கும் எச்ஐவி பாதிப்பு இல்லாதது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த பெண் ணுக்கு எச்ஐவி பாதிப்பினை கட்டுப் படுத்தும் வகையில் ஓமலூர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2-வது பிரசவத்தின் போது பிறந்த குழந்தைக்கும் எச்ஐவி தொற்று இல்லாததும் உறுதி செய்யப்பட்டு அந்த குழந்தையும் நலமுடன் உள்ளது.

இந்நிலையில், அப்பெண்ணின் கணவர் கூறும்போது, “மேச்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதிக்கப்படாத ரத்தம் செலுத் தப்பட்டதால்தான் எனது மனை விக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டுள் ளது. சிகிச்சை அளித்தவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதுகுறித்து சேலம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்கு நர் பூங்கொடி கூறியது: ஊடகங் களில் வந்த தகவலின் அடிப்படை யில் ஆவணங்களை ஆய்வு செய் தோம். 2014-ல் அப்பெண்ணுக்கு ரத்தம் வழங்கிய கொடையாளி தற் போது வரை ரத்த தானம் செய்து வருகிறார். அவருக்கு தற்போது வரை எச்ஐவி பாதிப்பு கிடையாது. அவருக்கு நடத்தப்பட்ட ரத்தப் பரி சோதனையில் இது உறுதி ெசய்யப்பட்டுள்ளது.

இந்த புகார், அதன் மீதான உண்மை நிலவரம் குறித்து அரசுக் கும், எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப் புக்கும் அறிக்கை தர உள்ளோம். தனியார் மருத்துவமனைகள் இது போன்ற புகார்களை பரப்புகின்றன என்பதை அலட்சியப்படுத்த முடியாது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x