மேல்மருவத்தூரில் தைப்பூச திருவிழா: நாளை முதல் விரைவு ரயில் நிற்கும்

மேல்மருவத்தூரில் தைப்பூச திருவிழா: நாளை முதல் விரைவு ரயில் நிற்கும்
Updated on
1 min read

தைப்பூச விழாவை முன்னிட்டு மேல்மருவத்தூர் ரயில் நிலையத் தில் 22 விரைவு ரயில்கள் நாளை முதல் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தைப்பூச விழாவை முன்னிட்டு டிசம்பர் 5-ம் தேதி (நாளை) முதல் ஜனவரி 21-ம் தேதி வரை 22 விரைவு ரயில்கள் தற்காலிகமாக மேல்மருவத்தூர் ரயில் நிலையத் தில் ஒரு நிமிடம் நின்று செல்லும். அதன்படி, மலைக்கோட்டை, வைகை, பாண்டியன், பொதிகை, மன்னை, ராமேஸ்வரம் - புவனேஸ் வர், தாம்பரம் - திருநெல்வேலி அந்த்யோதயா மற்றும் சிறப்பு ரயில்கள் உள்ளிட்ட 11 விரைவு ரயில்கள் இரு மார்க்கத்திலும் அங்கு நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in