

கஜா புயல் பாதிப்பு கணக்கெடுப் பில் தஞ்சாவூர் ஒன்றியம் விடுபட்ட தாகக் கூறி 20 கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கஜா புயல் தாக்கியதில் தஞ்சா வூர் ஒன்றியத்தில் மருங்குளம், கொல்லாங்கரை, வடக்குப்பட்டு, வேங்கராயன்குடிக்காடு, அதினாம் பட்டு, வல்லுண்டாம்பட்டு, நாஞ்சிக் கோட்டை, சூரியம்பட்டி கோபால் நகர், நாகப்புடையான்பட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சோளம், தென்னை, தேக்கு, முந்திரி, நெல், கரும்பு ஆகி யவையும், ஏராளமான வீடுகளும் பாதிக்கப்பட்டன.
மேலும் நூற்றுக்கணக்கான மின் கம்பங்கள் சேதமடைந்தால் பாதிக் கப்பட்ட குடியிருப்பு பகுதிகளுக்கு மட்டுமே மின்விநியோகம் வழங்கப் பட்டுள்ள நிலையில், பல கிராமங்க ளில் விவசாய பம்புசெட்டுகளுக்கு இன்னும் மின் விநியோகம் வழங்கப் படவில்லை. இதனால் நீரின்றி நெற் பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், புயலால் தஞ்சா வூர் ஒன்றியம் நாஞ்சிக்கோட்டை பகுதிகளில் உள்ள கிராமங்கள் பாதிக்கப்படவில்லை எனக் கருதி தமிழக அரசு நிவாரண உதவிகள் எதுவும் இப்பகுதிகளுக்கு வழங்கப் படவில்லை. எனவே, புயல் பாதிப்பை அதிகாரிகள் மூடி மறைக்க முயல்வதாக குற்றம் சாட்டி மருங்குளம் நான்கு ரோடு சந்திப்பில் 20 கிராம மக்கள் திரண்டு நேற்று மறியலில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு தஞ்சாவூர் ஒன்றியத்தையும் புயல் பாதிக்கப்பட்ட பகுதியாக சேர்த்து உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும். விவசாய பம்புசெட்டுகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் எனக் கோரி காய்ந்து கருகி பதராகிவிட்ட நெற்கதிர்களை கையில் ஏந்தியபடி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
வருவாய் மற்றும் காவல் அதிகாரிகளின் உறுதியை ஏற்று அவர்கள் மறியலை கைவிட்டனர்.திருக்கானூர்பட்டி, அற்புதாபுரம், தோழகிரிப்பட்டி, மேட்டுப்பட்டி, குருங்குளம் பகுதி கிராமத்தினரும் புயல் நிவாரணம் கோரி நேற்று மறியலில் ஈடுபட்டனர்.