

குக்கரில் மறைத்து கொண்டு வந்த 4.5 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். கடத்த லில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப் பட்டனர். மேலும் சுங்கத்துறை பெண் அதிகாரியை மிரட்டிய கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
சிங்கப்பூரில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக் கிழமை அதிகாலை விமானம் வந்தது. சுங்கத்துறையினர் பயணி களை சோதனை செய்து அனுப்பினர். அப்போது குக்கருடன் வந்த 4 பயணிகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட் டது. இதனைத் தொடர்ந்து அவர் களை தீவிரமாக சோதனை செய்த னர். ஆனால், அவர்களிடம் எதுவும் சிக்கவில்லை. அவர்கள் வைத் திருந்த குக்கரை சோதனை செய்த போது, உள்ளே 4.5 கிலோ தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள 4.5 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
தங்கம் கடத்திய 4 பேரையும் போலீஸார் கைது செய்து விசா ரணை நடத்தினர். அவர்களது பெயர் பீர்முகமது, நைனா முகமது, பஷீர், குரோஷி என தெரியவந்தது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது 20 பேர் கொண்ட கும்பல் விமான நிலையத்துக்குள் புகுந்து பணியில் இருந்த சுங்கத்துறை உதவி ஆணையர் அமிர்தா ராய் என்பவரிடம், வெளிநாடுகளில் இருந்து தங்கம் கொண்டு வந்தால் உடனே பிடித்து வைத்துக் கொண்டு எங்கள் தொழிலுக்கு இடையூறு செய்கிறீர்கள். தங்கத்துடன் கைது செய்து வைத்துள்ள 4 பேரையும் உடனே விடுவிக்க வேண்டும். நீங்கள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் சிபிஐயில் உங்கள் மீது பொய் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க வைப்போம் என மிரட்டினர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்ததாக தெரிகிறது.
இதுபற்றி பெண் அதிகாரி அமிர்தா ராய் போலீஸில் புகார் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு தாம்பரம் உதவி கமிஷனர் மனோ கரன் தலைமையில் போலீஸார் வந்த னர். ஆனால், அதற்குள் கும்பல் தப்பிவிட்டது. இதுதொடர்பாக விமான நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1.4 கிலோ தங்கம்
சர்வதேச விமான நிலையத்தில் முதலாவது நகரும் சுமைதூக்கி அருகில் ஒரு பை கேட்பாரற்று இருந்தது. அதை போலீஸார் சோதனை செய்த போது, 1.4 கிலோ தங்கம் இருந்தது. இதையடுத்து அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்தனர். தங்கத்தை யார் கடத்தி வந்தது என்பது பற்றி விமான நிலைய சிசிடிவி காட்சிகளை வைத்து சுங்கத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.