

சென்னையில் உள்ள ஓஎன்ஜிசி அதிகாரி வீட்டில் நகை திருட்டு நிகழ்ந்துள்ளது.
சென்னை நெற்குன்றம் சாம்சன் சரோஜா தெருவைத் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் சென்னை ஓஎன்ஜிசியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். சந்திரசேகர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றார்.
இந்நிலையில் நேற்று இரவு வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 20 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடி யாக இதுகுறித்து ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, குற்றப்பிரிவு போலீஸார் நகை திருட்டு குறித்து விசாரித்து வருகின்றனர்.