

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 3,636 பேரும், பன்றிக்காய்ச்சலால் 2,458 பேரும் பாதிக்கப்பட்டிருப்ப தாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச் சல் தீவிரமாக இருந்தன. தமிழகத்தின் மற்ற மாவட்டங்களைவிட சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் இந்த காய்ச்சல் களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிக்கத் தொடங்கியது. குழந்தை கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் இந்தக் காய்ச்சல் களால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றனர்.
காய்ச்சல்களின் தீவிரத்தால் உயிரிழப்புகளும் நிகழ்ந்தன. சுகாதாரத் துறையும் காய்ச்சல் களைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத் தனர்.
இந்நிலையில் நாடுமுழுவதும் டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச் சல் பாதிப்பு குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத் துறை வெளியிட் டுள்ளது. அந்த அறிக்கையில் கடந்த ஜனவரி முதல் நவம்பர் வரை நாடுமுழுவதும் 89,974 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 144 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 3,636 பேர் பாதிக்கப்பட்டு, 5 பேர் இறந்துள்ள னர். பன்றிக்காய்ச்சலால் நாடுமுழுவதும் 13,447 பேர் பாதிக்கப்பட்டு, 969 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 2,458 பேர் பாதிக்கப்பட்டு, 15 பேர் உயிரிழந்திருப்ப தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.