Last Updated : 09 Dec, 2018 10:26 AM

 

Published : 09 Dec 2018 10:26 AM
Last Updated : 09 Dec 2018 10:26 AM

புயலால் செயலிழந்த கண்காணிப்பு கேமராக்கள்: அதிகரிக்கும் குற்றச் செயல்களால் பொதுமக்கள் அச்சம்

கஜா புயலால் கும்பகோணம் நகரில் பெரும்பாலான கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்ததால் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கும்பகோணத்தில் குற்றச் செயல் கள் நடைபெறாமல் தடுக்கவும், போக்குவரத்தை ஒழுங்குப் படுத்த வும், காவல்துறை சார்பில் 380 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள் ளன. காவல்துறை கட்டுப்பாட்டு அறையிலிருந்து இவற்றை போலீ ஸார் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் அண்மையில் வீசிய கஜா புயலில், 260 கண் காணிப்பு கேமராக்கள் சேதமடைந் துள்ளன. இதையடுத்து, போலீ ஸாரின் கண்காணிப்பில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள் ளதால், குற்றச் செயல்கள் அதி கரிக்கத் தொடங்கியுள்ளதாக பொது மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடந்த 2 வாரங்களுக்கு முன், கும்பகோணம் எல்பிஎஸ் சாலையில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியை ஒருவரை, இளைஞர் ஒருவர் கடத்தி சென்றார். ஆனால், அந்தப் பகுதியில் பொருத்தப் பட்டுள்ள கண்காணிப்பு கேமராக் கள் செயல்படாததால், அந்தக் காட்சிகள் பதிவாகவில்லை. இருந்தாலும் அந்த ஆசிரியையின் செல்போன் உதவியுடன், அவர் போலீஸாரால் மீட்கப்பட்டார்.

அதேபோல, கடந்த வாரம் வடமாநில பெண் ஒருவரை 4 இளைஞர்கள் பலாத்காரம் செய்த சம்பவத்தில், அந்தப் பெண்ணை சம்பந்தமே இல்லாத இடத்துக்கு ஆட்டோவில் அழைத்துச் சென்று இறக்கிவிட்டுச் சென்ற ஓட்டுநரை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர். இந்த சம்பவம் நடைபெற்ற பகுதியி லும் கண்காணிப்பு கேமராக்கள் செயல்படவில்லை என்பதால், ஆட்டோ ஓட்டுநரை கண்டுபிடிப் பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக் கூட்ட நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் கூறியது: கும்பகோணம் நகரம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள் ளன. சாலைகளில் யாராவது சந்தேகப்படும் வகையில் சுற்றி னால், கண்காணிப்பு கேமரா மூலம் கட்டுப்பாட்டு அறையிலி ருந்து அவரை போலீஸார் கண்காணித்து, அந்தப் பகுதி யில் பொருத்தப்பட்டுள்ள ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுப்பார்கள். மேலும், சில நேரங்களில் அப்பகுதியில் இருக்கும் போலீஸாருக்கு தகவல் தெரிவித்து, அந்த நபரை பிடித்து விசாரிப்பார்கள். இதனால், குற்றச் செயல்களை தடுக்க முடிந்தது.

இதனால், கட்டுப்பாட்டு அறையிலிருந்து போலீஸார் கண்காணிக்கிறார்கள் என குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் அவ்வாறான நடவடிக்கைகளை தவிர்த்துவந்தனர். ஆனால் சில மாதங்களாக போலீஸாரின் இந்த ஒலிபெருக்கி அறிவிப்பு இல்லை. இதனால் குற்றவாளிகள் தைரியமாக குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

இதுகுறித்து காவல் துறை ஆய்வாளர் ஒருவர் கூறியது: குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை பிடிக்க கண்காணிப்பு கேமராக்கள் உதவியாக இருக்கும். தற்போது, புயலால் சேதமடைந்துள்ள கண்காணிப்பு கேமராக்கள் விரைவில் சரி செய்யப்படும். வடமாநில பெண் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், அவரை ஆட்டோவில் அழைத்துச் சென்ற சம்பவம் காவல்துறை சார்பில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகவில்லை. இதனால், வீடுகளில், கடை களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை கொண்டு ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் வடமாநில பெண்ணை அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் பிடிபடுவார் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x