

முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர் களுடன் இன்று (டிச.14) திமுக வில் இணைய உள்ளார் எனத் தெரிவிக்கப்படும் நிலையில் அவர், கரூர் மாவட்ட அமமுக நிர்வாகிகள் மற்றும் தனது ஆதரவாளர்களுடன் சென்னைக்குப் புறப்பட்டார்.
அமமுக மாநில அமைப்புச் செயலாளர், மாவட்டச் செயலாளர், கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளராக உள்ள முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி திமுகவில் இணையப்போவதாக அண்மையில் தகவல்கள் வெளியா கின. டிச.8-ம் தேதி திமுகவில் இணைவார் என்று முதலில் தகவல்கள் வெளியான நிலை யில், கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெறும் டிச.16-ம் தேதி இணைய உள்ளார் என தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இன்று (டிச.14) திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை கலைஞர் அறிவாலயத்தில் தனது ஆதரவாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருடன் செந்தில் பாலாஜி திமுகவில் இணைவதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.
கலைஞர் அறிவாலயத்தில் இன்று (டிச.14) காலை 11 மணிக்கு நடைபெற உள்ள நிகழ்ச்சியில் செந்தில்பாலாஜி கட்சியில் இணைய மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
வேன், கார்களில் பயணம்
இந்நிலையில், செந்தில் பாலாஜி, அமமுக நகரச் செயலாளர் ராஜா, மாவட்ட நிர்வாகிகள் தாரணி சரவணன், முரளி உள்ளிட்ட நிர்வாகிகள், அமமுகவில் உள்ள செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் வேன், கார்க ளில் நேற்று சென்னைக்குப் புறப்பட்டனர்.
கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து புறப்பட்ட இவர்கள் அனைவரும் பெரம்பலூ ரில் ஒன்றிணைந்து அங்கிருந்து சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றதாகக் தெரிகிறது.