

ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் நகர் மற்றும் கிராம ஊரக திட்ட ஆணையராக பதவி வகிக்கும் பியுலா ராஜேஷ் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையராக மாற்றப்பட்டார்.
சிஎம்டிஏ முதன்மை செயலாளர் ராஜேஷ் லக்கானிக்கு அடுத்த உத்தரவு வரும்வரை நகர மற்றும் கிராம திட்ட ஆணையராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்துள்ளார்.
சமீபத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்று உயர் நீதிமன்றத்தில் அதிருப்தி தெரிவித்த நீதிபதி, நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத போக்கு சமீப காலமாக அதிகரித்து வருவதாக கண்டனம் தெரிவித்தார்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக நகரமைப்புத் துறை இயக்குனர் பீலா ராஜேஷ் ஜனவரி 21-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறுப்பிடத்தக்கது.