

கடந்த 2009 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் முடித்து வைக்கப்பட்ட எப்ஐஆர்-கள் எத்தனை என்பது குறித்து கீழமை நீதிமன்றங்கள் வரும் 28-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் விடுத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஒரு வழக்கு விசாரணையின் போது உயர் நீதிமன்ற நீதிபதிகள், தமிழகம் முழுவதும் கடந்த 2009 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் குறிப்பிட்ட காலத் துக்குள் குற்றப்பத்திரிகை தாக் கல் செய்யப்படாமல் முடித்து வைக்கப்பட்ட எப்ஐஆர்-களின் எண்ணிக்கை எத்தனை என்பது குறித்த புள்ளி விவரத்தை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற பதிவுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து குற்றவியல் நடுவர்களும், கடந்த 2009 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் குறித்த காலத்துக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாத காரணத்தால் முடித்து வைக்கப் பட்ட எப்ஐஆர்.களின் எண்ணிக் கையை ஆண்டுவாரியாக பட்டியலிட்டு உயர் நீதிமன்றத்துக்கு வரும் 28-ம் தேதிக்குள் அந்தந்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி அல்லது தலைமை குற்றவியல் நடுவர் மூலமாக உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.