

சாத்தூரில் கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றிய சம்பவம் குறித்து தொழில்நுட்பரீதியாக வும், நிர்வாகரீதியாகவும் ஏற்பட் டுள்ள தவறுகளைக் கண்டறியும் வகையில், மாநில சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் 5 பேர் கொண்ட உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டு உள்ளார்.
அதன்படி, மருத்துவப் பணி கள் கூடுதல் இயக்குநர் டாக்டர் மாதவி தலைமையில், சென்னை மருத்துவக் கல்லூரி மருந்துத் துறை பேராசிரியர் டாக்டர் ரகு நந்தனன், நுண் உயிரியல் துறை பேராசிரியை யுப்ரேசியா லதா, திருநெல்வேலி மருத்துவக் கல் லூரி பேராசிரியை மணிமாலா, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் பல் கலைக்கழக பேராசிரியர் ஹம்ச வர்த்தினி ஆகியோர் விசாரணைக் குழு உறுப்பினர் களாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தக் குழுவினர் சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் இன்று (டிச.28) விசாரணையைத் தொடங்கு கின்றனர்.