Published : 29 Dec 2018 08:33 AM
Last Updated : 29 Dec 2018 08:33 AM

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் குறித்த நூல்; முதல்வர் பழனிசாமி வெளியிட்டார்: மு.க.ஸ்டாலின், தோனி, ராகுல் திராவிட், பங்கேற்பு

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத் தின் 70 ஆண்டு கால வளர்ச்சி, பயணம், அதன் நிர்வாக இயக்குநர் என்.சீனிவாசனின் 50 ஆண்டு கால பயணம் பற்றிய ஆங்கில நூலை சென்னையில் நடந்த விழாவில் முதல்வர் கே.பழனிசாமி வெளியிட் டார். இவ்விழாவில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், கிரிக் கெட் வீரர்கள் தோனி, ராகுல் திராவிட், கபில்தேவ், கவாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத் தின் 70 ஆண்டுகால பயணம், அதன் நிர்வாக இயக்குநர் என்.சீனி வாசனின் 50 ஆண்டு கால பணிகள், இந்திய கிரிக்கெட் வளர்ச்சியில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் மற்றும் சீனிவாசனின் பங்களிப்பு தொடர்பாக கல்யாணி என்பவர் "Defying the Paradigm Fifty years of Grit, Vision and Institution Building" என்ற ஆங்கில நூலை எழுதியுள்ளார். இதன் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங் கில் நேற்று நடைபெற்றது. முதல்வர் கே.பழனிசாமி நூலை வெளியிட, கிரிக்கெட் வீரர் தோனி முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.

இந்த விழாவில் முதல்வர் பழனி சாமி பேசியதாவது:

விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத கால கட்டத்தில் 1965-ம் ஆண்டே இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் கிரிக் கெட் வீரர்களை பணியில் அமர்த் தியது. கிரிக் கெட், டென்னிஸ் உட்பட பல்வேறு விளையாட்டு வீரர்களையும் ஊக்குவித்து அந்த விளையாட் டுகள் நடைபெற நிதியுதவி அளித் தது. இவ்விழாவில் கிரிக்கெட் வீரர் கள் பட்டாளம் பங்கேற்றிருப்பது அதற்கு நல்ல எடுத்துக்காட்டு. கிராமப்புறங்களில் கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் சீனி வாசன் ஏற்படுத்திய டிஎன்பிஎல் போட்டிகள் அமைந்துள்ளது. இதன்மூலம் இளைஞர்களின் விளையாட்டுத்திறன் வெளிக் கொணரப்பட்டு அவர்கள் மாநில, தேசிய அளவிலான அணியில் இடம்பெறும் நாள் வெகுதூரம் இல்லை.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பேசும்போது, “சிமெண்ட் தொழில்துறையிலும், கிரிக்கெட் வளர்ச்சியிலும் சீனிவாசனின் பங் களிப்பு அளப்பறியது. கிரிக் கெட்டை தொழில்ரீதியிலான விளை யாட்டாக மாற்றிய பெருமை சீனி வாசனையே சேரும்" என்றார். முன்னாள் கேப்டன் கபில் தேவ் பேசும்போது, “இந்திய கிரிக் கெட்டை திறம்பட வழிநடத்தியவர் சீனிவாசன். கிரிக்கெட் வீரர்களை அவரைப் போல் வேறு யாராலும் கவனித்துக்கொள்ள முடியாது" என்று குறிப்பிட்டார்.

முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட் பேசும்போது, “சீனிவாச னுக்கு கிரிக்கெட் மீதும் கிரிக்கெட் வீரர்கள் மீதும் அன்பும் பற்றும் அதிகம். என் மீதும் எங்கள் குடும் பத்தினர் மீதும் தனிப்பட்ட அக்கறை கொண்டவர்" என்றார். கிரிக்கெட் வீரர் தோனி பேசும்போது, "இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ச்சியில் சீனிவாசனுக்கு முக்கிய பங்கு உண்டு. கிரிக்கெட்டில் ஏற்ற இறக்கங்கள் உண்டு. அதிலிருந்து நான் பாடங்கள் கற்றிருக்கிறேன்" என்று குறிப்பிட்டார். சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் மகேந்திர சிங்கி, சிமெண்ட் தொழில் வளர்ச்சியில் சீனிவாசன் ஆற்றிய பணிகளை எடுத்துரைத்தார்.

முன்னதாக, இந்தியா சிமெண்ட்ஸ் இயக்குநர் ரூபா குருநாத் வரவேற்றார். நிறைவாக, நிர்வாக இயக்குநர் என்.சீனிவாசன் நன்றி கூறினார். விழாவில், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சந்து போர்டே, குண்டப்பா விஸ்வநாத், ராம்கோ குழுமத்தின் தலைவர் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா, நூலா சிரியர் கல்யாணி, வடிவமைப்பாளர் மாளவிகா அரோரா, அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், எஸ்.தங்கமணி, சி.விஜயபாஸ்கர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக பொருளா ளர் துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x