

மரபின்மைந்தன் முத்தையாவுக்கு அம்பத்தூர் கம்பன் கழகம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ‘தமிழ்ச்சுடர்’ விருது வழங்கப்படுகிறது.
இவ்விருது வழங்கும் விழா அம்பத்தூர் திருமால் திருமண மண்டபத்தில் 24.08.2014 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த விழாவுக்கு கம்பன் கழகத் தலைவர் பழ.பழனியப்பன் தலைமை தாங்குகிறார்.
முன்னதாக ரம்யா அசோக், “கம்பனில் வாழ்வியல் நெறிகள்” என்னும் தலைப்பில் உரை நிகழ்த்துகிறார். மரபின்மைந்தன் முத்தையா “கம்பனில் தவம்” எனும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்துகிறார். செயலாளர் வி.சுப்பிரமணியன் நன்றி கூறுகிறார்.