கஜா புயல்: கடுமையான காற்று காரணமாக சென்னை - திருச்சி ஏர் இந்தியா விமான சேவை ரத்து 

கஜா புயல்: கடுமையான காற்று காரணமாக சென்னை - திருச்சி ஏர் இந்தியா விமான சேவை ரத்து 
Updated on
1 min read

புயல் காற்று காரணமாக சென்னை - திருச்சி ஏர் இந்தியா விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான 'கஜா' புயல், நாகை வேதாரண்யம் இடையே வியாழக்கிழமை நள்ளிரவில் கரையைக் கடந்தது. நாகை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் புயல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், புயல் காற்று காரணமாக, திருச்சி விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஷார்ஜாவில் இருந்து திருச்சி வந்த விமானம், காற்று கடுமையாக இருந்த நிலையில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு கொச்சிக்கு திருப்பி விடப்பட்டது.

மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த விமானம், தரையிறங்க முடியாத சூழல் ஏற்பட்டதால் சென்னைக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

கொச்சினில் இருந்து திருச்சிக்கு வந்த விமானம் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டது.

சென்னையிலிருந்து திருச்சிக்கு வர வேண்டிய இண்டிகோ நிறுவனத்தின் இரண்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருச்சி-சென்னை, சென்னை-திருச்சி விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அதேபோல், கொழும்புவில் இருந்து திருச்சிக்கு வர வேண்டிய விமானம் தாமதப்படுத்தப்பட்டுள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் 40-70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் நிலையில், நண்பகலில் தான் அங்கு நிலைமை கட்டுக்குள் வரும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அங்கு விமான சேவைகள் எப்போது மீண்டும் தொடங்கப்படும் என்பது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in