Published : 23 Nov 2018 10:11 AM
Last Updated : 23 Nov 2018 10:11 AM

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து ஆலோசனைக்கு பிறகு அரசு முடிவெடுக்கும்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங் களில் விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்வது குறித்து ஆலோசனைக்கு பிறகு தமிழக அரசு முடிவெடுக்கும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

கஜா புயலினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணி குறித்து புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறை அலுவலர்களுடன் நேற்று இரவு நடைபெற்ற ஆய்வுக் கூட் டத்தில் கலந்துகொண்ட அவர், செய்தியாளர்களிடம் கூறியது:

‘‘கஜா புயலானது நம் தலை முறை காணாத அளவுக்கு பெரிய பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தமிழக அரசு முனைப்புடன் சீரமைப்புப் பணி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இதற்கு முன்பும் சரி, தற் போதும் சரி இயற்கை இடர்பாடு காலங்களில் அதிமுக அரசு மக்களுக்கு மனசாட்சிப்படி பணி யாற்றுவதை சகித்துக்கொள்ள முடியாமல் திமுக அரசியல் செய்கிறது.

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து ஆலோசனைக்கு பிறகு தமிழக அரசு முடிவெடுக்கும்.

பசுமை வழிச் சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங் களில் இருந்த தென்னை மரங் களுக்கு நிவாரணம் அறிவிக்கப் பட்டது வேறு. கஜா புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளுக்கு நிவாரணம் அறிவிப்பதென்பது வேறு.

இதுபோன்ற இயற்கை இடர்பாடுகளுக்கு மத்திய அரசின் வழிகாட்டுதல்படிதான் நிவாரணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சீரமைக்கவும், நிவாரணம் வழங்கவும் நிதி வழங்கக் கோரி தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பிரதமரை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, சேதங் களைப் பார்வையிடுவதற்கு மத்தியக் குழு நாளை (இன்று) வரவுள்ளது. மத்திய அரசு நிதி அளிக்கும் முன்னரே தமிழக அரசு வேண்டிய நிதியை அளித்து சீரமைப்பு பணிகளை மேற் கொண்டு வருகிறது’’ என்றார்.

முன்னதாக புதுக்கோட்டை மாவட்டத்தில் களமாவூர், கீரனூர், குளத்தூர், அடப்பாக்கார சத்திரம், திருவப்பூர் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணிகளை பார் வையிட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பாதிக்கப்பட்ட பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x